தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் வருகின்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய இருக்கிறது. புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் விண்ணப்பிப்பதற்கான நான்கு முக்கிய தகுதிகள் குறித்து வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ராகுல் டிராவிட் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடர் வரை இருக்க கேட்டு நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. ராகுல் டிராவிட் விருப்பப்பட்டால் அவரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இதற்கான கடைசி தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முக்கியமான தகுதிகள் குறித்து தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விரும்பக் கூடியவர்கள் 60 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்து 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் கட்டாயம் விளையாடியிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கக்கூடியவர் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் நாட்டைச் சேர்ந்தவராகவும், அந்த நாட்டிற்காக குறைந்தது இரண்டு வருடங்களாவது விளையாடி இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : சிஎஸ்கே அணியில்.. நானும் ஜடேஜாவும் விரக்தி அடைந்தோம்.. உண்மையை உடைத்த அம்பதி ராயுடு
மேலும் குறிப்பிட்ட நபர் ஏற்கனவே அசோசியேட் கிரிக்கெட் நாடு அல்லது ஐபிஎல் தொடர் அல்லது வேறு ஏதாவது டி20 லீக்குகள், இல்லை உள்நாட்டு கிரிக்கெட்டில் பயிற்சியாளராக குறைந்தது மூன்று வருடங்கள் இருந்திருக்க வேண்டும். பிசிசிஐ லெவல் 3 சான்றிதழுக்கு இணையான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.