இந்திய கிரிக்கெட்

எங்க இலங்கை அணி செய்றது ரொம்ப அவமானமா இருக்கு.. என்னால அதை மட்டும் ஏத்துக்கவே முடியல – பர்வேஸ் மஹரூப் வேதனை

உலகக் கிரிக்கெட்டில் இரண்டு உலகக் கோப்பை தொடர்களை வென்ற அணியாக ஆசியக் கண்டத்தில் இலங்கை அணி இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் ஆப்கானிஸ்தான அணியை விட கீழே இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி செயல்பட்ட விதம் அவமானமாக இருக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் பர்வேஸ் மஹரூப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தற்பொழுது தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு சூரியகுமார் மற்றும் ரோகித் சர்மா தலைமையில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. மேலும் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு இது முதல் தொடராக அமைந்திருக்கிறது.

முதல் போட்டியில் 14 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஒரு விக்கெட் என மிக வலிமையான இடத்தில் இருந்து 170 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 15 ஓவர்களுக்கு 130 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என இருந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மேலும் நேற்று கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்க இரண்டு ஓவர்களுக்கு வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மேலும் அந்த இரண்டு ஓவரையும் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசி அனுபவமே இல்லாத ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் வீசினார்கள். எனவே இலங்கை அணி இந்த போட்டியை வென்று நம்பிக்கை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ரிங்கு சிங் வீசிய 19 ஆவது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தார்கள். இதற்கடுத்து சூரியகுமார் வீசிய இருபதாவது ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தார்கள். சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் இரண்டு ரன்களுக்கு இழந்து விட்டார்கள். மேலும் சூப்பர் ஓவர் பந்து வீச்சில் முதல் பந்திலேயே பவுண்டரி கொடுத்து தோற்றார்கள். இந்த தோல்வியை இலங்கை ரசிகர்கள் மட்டும் அல்லாமல் இலங்கை முன்னாள் வீரர்களாலும் தாங்க முடியவில்லை.

இதையும் படிங்க : 2 ஓவர் 9 ரன்.. சூரியகுமாருக்கு அநேகமா அது தெரிஞ்சி இருக்கலாம் போல – ஹர்ஷா போக்லே பாராட்டு

இதுகுறித்து மிகவும் வேதனையாக பதிவு செய்துள்ள இலங்கை முன்னாள் வீரர் பர்வேஸ் மஹரூப் “போட்டியை வெல்லக்கூடிய பலமான நிலையில் இருந்து மீண்டும் மீண்டும் சரிவது அவமானமாக இருக்கிறது. நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாத இயலாமை கவலை அளிக்கிறது. மேலும் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சர்வதேச அளவில் விளையாடுவதற்கு இது போதுமானது கிடையாது. மேலும் நேரடி ஒளிபரப்பில் கிரிக்கெட் வர்ணனையில் இதை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கூறி வேதனை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts