இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டைன் மற்றும் ஷான் பாண்ட் ஆகியோர் இந்த தலைமுறை பந்துவீச்சாளர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்கள்.
தற்போது உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. இதற்கு முன்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அதற்கு முன்னால் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
பும்ராவை பொருத்தவரை ஏற்கனவே வகுத்த திட்டத்தோடு களமிறங்காமல், ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு பந்துகளை பேட்ஸ்மேனுக்கு வீசுவார். இதனால்தான் பும்ரா நுணுக்கமான பந்துவீச்சாளர் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டைன் மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷான் பாண்ட் ஆகியோர் பும்ரா மற்றும் ரபாடா ஆகியோர் தங்கம் போன்ற வீரர்கள் எனவும் மற்ற 70% பந்துவீச்சாளர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்கள்.
இது ஒரு ஷேன் பாண்ட் கூறும்போது ” ஒரு சர்வதேச பந்துவீச்சாளராக ஒருவருக்கு போட்டியின் அனுமானம் இருக்க வேண்டும். போட்டியில் தான் என்ன செய்கிறோம் என்பதை செயல்பட்டு விளையாட வேண்டும். 70 சதவீதம் பந்துவீச்சாளர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே தெரியாதவர்கள். நான் எனது கேப்டனிடம் ஒரு பந்துவீச்சாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூற அனுமதிக்க வேண்டும் என்று கூறுவேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:கோலி ரோஹித் சர்மா இருந்தாதான் இந்திய அணி ஜெயிக்குமா.? அவங்களுக்கு என்னோட பதில் இதுதான் – சுனில் கவாஸ்கர்
இது குறித்து ஸ்டெயின் கூறும்போது
“உலகின் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவை பார்த்தால் அவர் என்ன செய்கிறார் என்று நன்றாக தெரியும். அவர் தனது உள்ளுணர்வை நன்றாக பயன்படுத்துகிறார். திறமையின் கலவை, கடின உழைப்பு, பேட்ஸ்மேன்காக தயாராகும் விதம் உள்ளிட்ட விஷயங்களால்தான் அவர் தற்போது நம்பர் ஒன் பவுலராக திகழ்கிறார். மேலும் தென்னாப்பிரிக்க அணியின் ரபாடா இதே போன்று திறமையை பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் தங்கம் போன்றவர்கள். அவர் விளையாட்டின் எந்த நேரத்திலும் வந்து வீசி விக்கெட் எடுக்கும் திறனை கொண்டுள்ளனர். எனவே இவரைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரிடமும் இது போன்ற விஷயங்கள் இல்லை” என்று கூறி இருக்கிறார்.