மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்துள்ள முன்னாள் ஆர்சிபி இளம் வீரர் – காரணம் இதுதான்

0
1010
Rajat Patidar RCB

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டு போட்டிகள் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தன்னுடைய திருமணத்தை முடித்து தற்பொழுது அந்த அணியில் இணைந்துள்ளார்.

மறுபக்கம் அந்த அணியின் இளம் வீரர் லுவினித் சிசோடியா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு தகுந்த மாற்று வீரரை தற்பொழுது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

மாற்று வீரரை அறிவித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 33 டி20 போட்டிகளில் விளையாடி 861 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஏழு அரை சதங்கள் அடங்கும். இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில் இவர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நான்கு முறை விளையாடியிருக்கிறார்.

தற்போது அவரை பெங்களூர் அணி மாற்று வீரராக தெரிவித்துள்ளது. 20 லட்ச ரூபாய் அடிப்படை விலையாக கொண்ட இவரை மாற்று வீரராக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 74 ரன்கள் இதுவரை அவர் குவித்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

பெங்களூரு அணி அதனுடைய அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வருகிற 5ஆம் தேதி அன்று சந்திக்க இருக்கின்றது.