இவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரரு.. அதனால பழைய இடத்துக்கே அனுப்பிருங்க.. இந்திய வீரர் குறித்து பாசித் அலி பேட்டி

0
214

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில் கடைசி மற்றும் சம்பிரதாயமான போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி இந்திய வீரர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் அதுக்கு செட்டாக மாட்டார்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் முதன்மையாக இருக்கும் நிலையில் அவருக்கு பேக் அப் வீரர்களாக ஆல்ரவுண்டர் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் திகழ்கிறார்கள். இந்த மூவருமே சுழற் பந்து வீச்சுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் மூலம் வாய்ப்பு கொடுத்தார்.

ஓரளவு நன்றாக செயல்பட்ட வருண் 10 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தாலும், ரன்கள் அதிகமாக கசிய விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருணுக்கு செட்டாகாது என அதற்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரால் அதை கையாள முடியாது

இதுகுறித்து பசித் அலி விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஏற்றதல்ல. வட்டத்திற்கு உள்ளே 5 பீல்டர்கள் இருந்தால் அவரால் அதை கையாள முடியாது. இது இந்தியாவின் சொந்த மைதானம் என்பதால் அவர் தப்பித்திருக்கிறார். ஒரு நாள் போட்டியில் நீங்கள் பந்து வீச வேண்டிய நீளம் அவரது நீளம் கிடையாது. எனவே அவர் டி20 வடிவத்திற்கு மட்டுமே செட் ஆவார் எனவும் ஒரு நாள் தொடருக்கு செட் ஆக வாய்ப்பில்லை” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:3-0 தோற்றாலும் கவலை இல்லை.. இந்திய அணியை அந்த இடத்தில் வீழ்த்தணும்.. அதுதான் எங்கள் இலக்கு – இங்கி வீரர் பேட்டி

இருப்பினும் வருண் சக்கரவர்த்தி சாம்பியன் டிராபி தொடரான 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் நாளைக்குள் சாம்பியன் டிராபி அணியில் இடம் பெறுவாரா? அல்லது இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பும்ரா அணியில் இருந்தாலும் அவரது தாயத்தின் தன்மையை பொறுத்து மாற்று பந்து வீச்சாளருக்கு இந்திய அணி செல்லுமா? அல்லது இதை அணியுடன் விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -