நாதன் லயனின் பேச்சுக்கு.. அஸ்வின் உடனே பதிலடி கொடுக்க வேண்டும் – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்

0
80
Ashwin

நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் கூடி இருந்த கருத்துக்கு இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக பதிலடி தர வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன் காரணமாக இந்த தொடருக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

நாதன் லயனின் சர்ச்சை கருத்து

இப்படியான நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றி மொத்தம் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது எனவும், இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரை 5-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் அவர் தன்னுடைய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரிடமிருந்தும் 100 அல்லது 110 ரன்களை எதிர்பார்க்கவில்லை என்றும், 180, 200 போன்ற பெரிய ரன்களை எதிர்பார்ப்பதாகவும், தொடரை முழுமையாக வெல்ல இப்படியான பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி தர வேண்டும்

இது குறித்து விமர்சனம் செய்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 5 போட்டிகளிலும் தோற்கடிக்கும் என்று ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பேச்சுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், இது வெறும் பேச்சு மட்டுமே. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது”

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்க அணியை வென்ற ஆப்கான்.. இந்தியா உலகின் ஒரே அணியாக சாதனை.. 12 மாதத்தில் 4 மெகா வெற்றி

“கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வாறான அறிக்கைகள் எல்லாம் பொருத்தமானதாக இருக்காது. ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இப்படி எல்லாம் கூறலாம். ஆனால் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் இப்படி பேசக்கூடாது. இதற்கு பதிலடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடிக்கும் என்று கூறவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -