நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்த இந்திய அணியை காகித புலிகள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இந்திய அணி தோற்றது.
முதல் இன்னிங்ஸ் ஏமாற்றம்
இந்தியா தோல்வியடைந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸ் மிகவும் மோசமான முறையில் பேட்டிங் செய்திருந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி பெரிய முன்னிலையை பெற்றது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் சராசரியாக விளையாடினாலும் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.
தற்போது இந்திய அணி குறித்து இந்தியா தாண்டி வெளியில் இருக்கும் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியின் டெஸ்ட் பேட்டிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மா இந்த ஒரு தோல்விக்காக பெரிய மாற்றங்கள் எதையும் செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி காகித புலிகள்
இது குறித்து பேசி இருக்கும் அகமத் சேஷாத் கூறும் பொழுது “நியூசிலாந்தின் இந்தியாவிற்கு வந்து அவர்களுக்கு பெரிய உரிமை இருப்பது போல, இந்திய அணியை குழந்தைகளை வீழ்த்துவது போல வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறார்கள். தற்போது மக்கள் இந்திய அணியை காகித புலிகள் வீட்டில் தோற்று விட்டார்கள் என்று கேலி செய்கிறார்கள்”
இதையும் படிங்க: இந்திய அணியில் இவர் இல்லாதது பெரிய லாஸ்.. எங்க வீரர்களே சொல்றாங்க – ஆஸி கோச் பேட்டி
“ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் 46 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்து தோல்வி அடைந்த பொழுது எல்லோருக்கும் ஒரு மோசமான நாள் உண்டு என்று கூறினார். அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அது நியாயமானது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்வியை பார்க்கும் பொழுது இவர்கள் மெத்தனமாகிவிட்டதாக தெரிகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி பள்ளி சிறுவர்கள் போல விளையாடி தோற்றது” என்று கூறி இருக்கிறார.






