நவீன கால கிரிக்கெட்டில் நுணுக்கமான பேட்டிங் டெக்னிக் தெரிந்த வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பேட்டிங்கில் டெக்னிக்கை விட அதிரடியாக விளையாடுவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன முகமது ஜாஹித் தனது பார்வையில் பேட்டிங் டெக்னிக் மற்றும் செயல் திறன் தெரிந்த வீரர்கள் குறித்து மதிப்பிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆக திகழும் பாபர் அசாம் கடந்த சில வருடங்களாக சிறப்பாக விளையாடியிருந்தாலும் பெரும்பான்மையான மக்களால் அவர் இன்னும் சிறந்த வீரர்கள் பட்டியலில் இணையவில்லை. வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்கள் அவருக்கு சிறப்பாக இல்லை என்றாலும், சில வருடங்களாகவே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறார். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் பேட்டிங் தொழில்நுட்பம் தெரிந்த வீரர்கள் என்று சொன்னால் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்மித், வில்லியம்சன் போன்ற வீரர்களை குறிப்பிடலாம். இவர்கள் நான்கு பேரும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஜாஹித் கூறும்போது “பேட்டிங்கை பொருத்தவரை நல்ல திறமையோடு செயல்படக்கூடிய வீரர் என்றால் அது பாபர் அசாம்தான். அனைத்து பேட்ஸ்மேன்களை காட்டிலும் பாபருக்கு திறமையும், சிறந்த பேட்டிங் தொழில்நுட்பமும் இருக்கிறது. ஆனால் பெர்பாமன்ஸ், பேட்டிங் அறிவு குறித்து கேட்கும் போது ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வேறொரு லெவலில் இருக்கிறார்கள்.
பாபரிடம் இருக்கும் திறமை அவர்களிடத்தில் இல்லை என்றாலும் விளையாட்டை மதிப்பிடுவதில் அவர்கள் புத்திசாலிகள். நான் ஸ்டீவ் ஸ்மித்தை முதல் இடத்திலும், ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், பாபர் அசாமை மூன்றாவது இடத்திலும் தரவரிசை படுத்துவேன்” என்று கூறி இருக்கிறார். பேட்டிங் அறிவு மற்றும் விளையாட்டை மதிப்பிடுவதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரருக்கு முதல் இரண்டு இடங்களை கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க:எங்க டீம்ல இவங்க அந்த வேலைய செய்யணும்.. நாங்க உள்நாட்டு கிரிக்கெட்லயே இதுல கில்லிதான் – வாஷிங்டன் சுந்தர் கருத்து
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி பற்றி அவர் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் மூவரை காட்டிலுமே பேட்டிங் டெக்னிக், செயல் திறன் மற்றும் பர்பாமன்ஸ் ஆகிய மூன்றிலுமே விராட் கோலி சிறந்தவராக இருக்கிறார் என்று இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.