டி20 உலகக் கோப்பை 2024

10 வருஷத்துக்கு முன்னாடி.. எனக்கு பண்ணுனத பாபர் ஆசமுக்கு பண்ணாதீங்க.. ஆதரவு தெரிவிக்கும் முகமது ஹபீஸ்

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்ததால், அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமின் கேப்டன்ஷிப் குறித்து விவாதம் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கொண்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியின் கேப்டன்ஷியில் திருப்தி அடையாத பாகிஸ்தான் வாரியம், 50 ஓவர் உலகக் கோப்பை தோல்வியால் ஏற்கனவே கேப்டன் பதவியை விட்டு விலகிய பாபர் ஆஸமை மீண்டும் கேப்டனாக நியமித்தது.

புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்று பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகக் கோப்பையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்தது. அதிலும் கறதுக் குட்டி அணியிடமும், இந்திய அணியிடமும் மோசமாக தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸமின் கேப்டன்சி மீது விமர்சனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தனது கேப்டன்ஷிப் குறித்து பாகிஸ்தான் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக பாபர் ஆசம் ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க உள்ளது என்ற தகவல் தற்போது பரவி வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் பாபருக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் “இது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெரும்பாலான நிர்வாகங்கள் பின் தங்கிய முடிவே எடுக்கின்றன. ஐசிசி தொடர்களில் மோசமான முடிவுகள் வரும் போதெல்லாம் அவர்கள் குறிப்பாக கேப்டன் மீது குற்றம் சுமத்துகிறார்கள். 2014ஆம் ஆண்டு எனக்கும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

2014ஆம் ஆண்டு எங்கள் மோசமான செயல்பாட்டினால் அரையிறுதிக்கு எங்களால் தகுதி பெற முடியவில்லை. அவர்கள் நான் செய்த அனைத்தையும் மறந்து விட்டனர். அந்த சமயத்தில் நான் வெற்றிகரமான கேப்டனாக இருந்தேன். நான் கொண்டு வந்த செயல்முறை அனைத்தையும் அவர்கள் மறந்து விட்டனர். உலகக் கோப்பை பொறுத்தவரை ஒரு அணி வெற்றி பெறுகிறது என்றால் மற்ற அணிகள் தோல்வியைத்தான் செய்யும். பாபர் சரியான கேப்டனாக இருப்பார் என்று நிர்வாக முடிவெடுத்தால் அதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:எங்க ஆர்ச்சர் 2வதுதான்.. பும்ரா இந்த காரணத்தால எப்பவும் பெஸ்ட்.. அதுக்கு ஈடே இல்ல – ஸ்டீவன் பின் பேட்டி

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் சரியான கேப்டன் என்று முடிவெடுத்த அவர்கள், இப்போது அவர்களால் அந்த முடிவை ஏன் எடுக்க முடியவில்லை? இது கிரிக்கெட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான சரியான வழியாக இருக்காது என்று நினைக்கிறேன்” என்று முகமது ஹபீஸ் கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by