ரோஹித் இதில் அதிர்ஷ்டசாலி.. பம்பரமாய் சுற்ற அவர் இருக்கும்போது கேப்டனுக்கு கவலையில்லை – பாக் பசித் அலி

0
241

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி ரோகித் சர்மா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இறுதிப்போட்டியில் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது நம்பிக்கை நட்சத்திரங்களாக சீனியர் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அடுத்த கட்டத்தில் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என எதிர்கால நட்சத்திரங்கள் தற்போது ஜொலித்துவரும் நிலையில் இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ரன்கள் அடிப்பது மட்டுமல்லாமல் அணிக்கு தேவையான நேரத்தில் ஆலோசனைகள் வழங்கவும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் கலந்து ஆலோசிக்கவும், அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் என அனைத்து திசைகளிலும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பஷித் அலி இது குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா ஒரு அதிர்ஷ்டசாலி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா விராட் கோலியை தனது அணியில் பெற்று பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார். விராட் கோலி ஜீரோ ரன்னில் ஆட்டம் இழந்தாலும் மைதானத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். முக்கியமான நேரங்களில் கேப்டனுக்கு அறிவுரை வழங்குகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை அனைவரும் கவனிக்கிறார்கள். அணிக்கு ஆதரவு தேவைப்பட்டால் அவர் கூட்டத்தை உற்சாகப்படுத்த வலியுறுத்துகிறார்.

இதையும் படிங்க:கங்குலி தோனி பாய் சொல்லும் இதைத்தான்.. டீம் இந்தியா இப்போ பின்பற்றி மாஸாக இருக்கு – ஸ்ரீசாந்த் பேட்டி

விராட் கோலி போன்ற ஒரு வீரரை கொண்ட அணி சில நேரங்களில் தோல்வியடைய கூடும். ஆனால் அது நிச்சயம் அதிக நேரமாக இருக்காது. ஏனென்றால் எப்படி வெற்றி பெறுவது என்று விராட் கோலிக்கு நிச்சயம் தெரியும்” என்று பசித் அலி பேசி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 84 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

- Advertisement -