அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தற்போது இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷித் அலி முக்கியமான விஷயம் ஒன்றை ஜெய் ஷா பற்றி கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் இந்தியா வந்தது. மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தனிப்பட்ட தொடரில் பொதுவான இடத்தில் விளையாடுவதற்கும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்கின்ற அளவில் பேச்சுகள் பரவலாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா தங்கள் போட்டிகளை மட்டும் வெளியில் நடத்துமாறு கேட்டு வருகிறதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா வித்தியாசமான செக் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குவைக்க இருக்கிறார் என்றும், இந்த முறை சுதாரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷித் அலி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷித் அலி கூறும் பொழுது “நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கூறப் போகிறேன். இன்னும் சில மாதங்களில் பிசிசிஐ செயலாளர் ஐசிசி-யின் தலைவராக வரப் போகிறார். எனவே ஐசிசி பார்முலாவை உருவாக்குவதற்கு இதுவே நமக்கு கடைசி வாய்ப்பு. இனி ஒவ்வொரு ஐசிசி நிகழ்விலும் இது நடக்கும். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி நடக்கிறது. இது குறித்து வெளியில் நிறைய பேச்சுகள் இருக்கிறது.
இதையும் படிங்க : இந்தியா டி20.. இன்னும் ஒரு நட்சத்திர இலங்கை வீரர் ரூல்ட் அவுட்.. ஜெயசூர்யா பிளானுக்கு உண்டான சரிவு
இந்த தொடரை நடத்துவதற்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதால் பாகிஸ்தானில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். ஆனால் ஐசிசி இப்பொழுது நம்முடன் விளையாடிக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள் பாகிஸ்தானியர்களுடன் விளையாடுகிறார்கள். இந்த முறை ஐசிசி கண்ணை மூடிக்கொண்டால் கிரிக்கெட் அழிந்து விடும். இதற்கு ஐசிசி தீர்வு காண வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.