நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தற்போது முன்னேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி, சிஎஸ்கே அணியில் இணையாதது குறித்து நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுள் சில முக்கிய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியின் சிறப்பான பவுலிங் எதிர் கொள்ள முடியாமல் 19 ஓவர்களிலேயே 104 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தோனி அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய போட்டியிலும் எம்எஸ் தோனி களம் இறங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் அனைத்து போட்டிகளுக்கு முன்பாக தோனி பயிற்சி பெறுவது போலவும், விளையாட தயாராக இருப்பது போன்ற நிலையிலும் சிஎஸ்கே தரப்பிலிருந்து வீடியோக்கள் வெளிவரும் நிலையில் இதனைப் பார்த்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த சூழ்நிலையில் சைமன் டவுல் இதனை டோனி வேண்டும் என்றே செய்கிறார் என்று சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “எம்எஸ் தோனி மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். அவர் வேண்டும் என்று மைதானத்திற்கு வருவதை தவிர்க்கிறார். அவர் மைதானத்தில் இருந்தால் கேமராக்கள் முதல் ரசிகர்கள் வரை தங்கள் கவனம் அனைத்தையும் அவர் மீது மட்டுமே செலுத்துவார்கள். இது புதிய சிஎஸ்கே கேப்டனின் ஆதிக்கத்தை குறைப்பதாக இருக்கும். எம்எஸ் எஃபெக்ட் எனப்படும் தோனியின் நிழல் தற்போதைய கேப்டனின் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்று அவர் பேசியிருக்கிறார்.