அந்த 2 இந்திய வீரர்கள் மாதிரி விளையாடினா.. ஆஷஸ் 4வது டெஸ்ட் அவ்ளோ ஈசியா முடிந்து இருக்காது – ராபின் உத்தப்பா பேட்டி

0
244

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெறும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து அணியின் வெற்றியை தீர்மானித்தது.

மேலும் ஆஸ்திரேலியாவின் மெல்போன் ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என்று பல முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வரும் நிலையில் இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வெறும் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

பெரும் இரண்டே நாட்களில் 36 விக்கெட்டுகள் வீழ்ந்து இருப்பதால் இந்த மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களை விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இது குறித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா, புஜாரா மற்றும் ரஹானே போன்று செயல் திறனில் உறுதியாக இருந்து விளையாடினால் எளிதாக ரன்கள் குவிக்க முடியும் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையாகும். இந்த ஆடுகளத்தை பார்க்கும் போது அவ்வளவு கடினமாக இருக்கும் என்று தோன்றவில்லை. பொதுவாக மெல்போன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இன்றைய கிரிக்கெட் விளையாடும் நிலைமை தான் இதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு ஏதுவானது தான் என்று எனக்கு தோன்றுகிறது.

இதையும் படிங்க:விராட் ரோஹித் இதை மறைக்கிறாங்க.. சரியான நேரத்தில் அவங்களே உண்மையை சொன்னால் நல்லது – ஆர்சிபி முன்னாள் வீரர்

உங்களிடம் சரியான நுட்பம், சரியான மனநிலை மற்றும் செயல் திறன் ஆகிய மூன்றும் இருந்தால் இந்த வகையான ஆடுகளத்திலும் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முடியும். இது அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய ஆடுகளம் இல்லை என்றாலும் 300 ரன்கள் எடுத்திருக்கக்கூடிய ஆடுகளமாக இருந்திருக்கும். இந்த விக்கெட்டில் 250 ரன்கள் கூட சாதகமாக இருந்திருக்கும். ஆனால் எதிர்த்து போராட வேண்டும். இந்தியாவின் புஜாரா மற்றும் ரகானே போல விளையாடினால் உங்களால் நிச்சயமாக ரன்கள் குவிக்க முடியும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -