இந்திய கிரிக்கெட்

ராஜா அவர் கோட்டைக்கு வந்துட்டாரு.. ஆனா நான் சொல்ற இத மட்டும் விராட் செய்யணும் – ரவி சாஸ்திரி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் அணியின் சீனியர் விராட் கோலி மிகத் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு முறையும் பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இதில் இந்திய வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எப்போது களம் இறங்கினாலும் மிகச் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி திரும்பவும் ஆஸ்திரேலியாவில் தனது தொடரை விளையாட இருக்கிறார்.

எனவே இந்த முறை விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் களமிறங்குவதற்கு முன்பாகவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் களமிறங்கி தனது பயிற்சிகளை தொடங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி 2021ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபிக் கோப்பை வென்ற போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி இதை மட்டும் செய்தால் போதும்

இது குறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்போது “ராஜா திரும்பவும் தனது எல்லைகளுக்கு வந்து விட்டார். விராட் கோலியின் வெறுப்பாளர்களுக்கு நான் இதைத்தான் கூறுவேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி பட்டத்தை பெற்றவுடன் பேட்டிங் செய்ய வரும்போது அது எதிரணியின் மனதில் நிச்சயம் இருக்கும். நீங்கள் உத்வேகமாக இருக்கிறீர்கள், விளையாடதற்கு தயாராக இருக்கிறீர்கள்.

இதையும் படிங்க:ரஞ்சியில் அசத்திய ஷமி.. ஆஸி செல்ல முடியுமா?.. பிசிசிஐ விதித்த 2 நிபந்தனைகள்.. வெளியான புதிய தகவல்கள்

விராட் கோலி குறித்து கூற வேண்டும் என்றால், முதல் அடி அடிப்பதில் விராட் கோலி ஆர்வமாக இருப்பார். ஆனால் இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். அவர் பேட்டிங் செய்ய வெளியே வரும் முதல் அரை மணி நேரத்திலோ அல்லது இந்த தொடரின் முதல் மூன்று இன்னிங்ஸ்களிலோ அவர் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக இருந்து தனது சொந்த வேகத்தில் விளையாடினால் அவர் சிறப்பான முறையில் செயல்படுவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts