5 ஓவர் போட்டி என்றாலே பொதுவாக முதலில் பேட்டிங் செய்வதை எந்த அணியும் விரும்பாது. ஏனென்றால் குறைந்த ஓவர்களில் ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டு, அதை சேஸ் செய்யும் சிறிய அணிக்கு அழுத்தம் கொடுப்பதுதான் பாதுகாப்பான அணுகுமுறையாக பார்க்கப்படும். குறிப்பாக சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு எதிராக சேஸ் செய்யும்போது பல நேரங்களில் வெற்றியைப் பெற முடியாமல் போகிறது.
ஆனால் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது குறித்து முகமது கைஃப் வேறொரு கோணத்தில் பேசியுள்ளார். சிறிய அணிக்கு எதிராக இந்தியா எடுத்த இந்த முடிவு தைரியமானது என்றும், தந்திர ரீதியாக சரியான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு அயர்லாந்துக்கு எதிராக சேஸ் செய்து இந்தியா தோல்வியடைந்த போட்டியையும் உதாரணமாக குறிப்பிட்டுள்ள கைஃப், சிறிய அணிகள் போட்டியின் சில கட்டங்களில் முன்னிலையில் இருந்தாலும், இறுதியில் போட்டியை முடித்து வெற்றி பெறுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், “பொதுவாக 5 ஓவர் போட்டியில் யாரும் முதலில் பேட்டிங் செய்வதில்லை. சிறிய அணிகள் சேஸ் செய்து வெற்றி பெறுவது கடினம் என்பதுதான் அதற்கான காரணம். அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தோல்வியடைகிறார்கள். இந்திய அணி எடுத்தது ஒரு தைரியமான முடிவு, மேலும் சிறிய அணிக்கு எதிராக அது தந்திர ரீதியாக சரியான முடிவு. அயர்லாந்துக்கு எதிராக நீங்கள் சேஸ் செய்து தோல்வியடைந்திருக்கிறீர்கள். சிறிய அணிகள் சில கட்டங்களில் முன்னிலையில் இருந்தாலும், போட்டியை முடிக்க முடியாமல் போகிறது. இந்த முடிவுக்காக நான் ஷ்ரேயாஸை பாராட்டுவேன். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளைத் தவிர, சேஸ் செய்து பெரிய அணிக்கு எதிராக சிறிய அணி வெற்றி பெற்ற போட்டியை எனக்கு காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.






