ஒரு வீரர் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் நீண்ட காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் திறமை இருக்கும் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முன்கூட்டியே வாய்ப்பு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று ஒரு முக்கிய கருத்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் வாய்ப்பு கிடைத்த தேவர் படிக்கல் சிறப்பாக விளையாடி சுதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
என்ன சூழ்நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் மன்விந்தர் பிஸ்லா “ஒரு வீரரை உள்ளூர் கிரிக்கெட்டிலேயே தொடர்ந்து 4-5 ஆண்டுகள் விளையாடச் செய்தால், அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக மாறலாம். ஆனால் இந்திய அணிக்கு வராமலேயே போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது. ஒரு திறமையான வீரரை நம்பி கௌதம் கம்பீர் அல்லது தேர்வாளர்கள் ஆதரவு கொடுத்ததற்காக அவர்களை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார்.
மேலும் கூறிய அவர் “சில நேரங்களில் புள்ளிவிவரங்களை வைத்து வீரர்களை தேர்வு செய்கிறார்கள். சில நேரங்களில் ஒரு வீரரின் திறமையை பார்த்து அவரை வேகமாக அணிக்குள் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த வீரர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு இருக்கும். இறுதியில் அந்த தேர்வு சரியா என்பதை நிரூபிக்க வேண்டியது வீரர்கள்தான்” என்று அவர் கூறினார்.





