இந்திய கிரிக்கெட்

38 ரன்ல அவுட் ஆகுறார்னு திட்டாதீங்க.. அதுக்கு காரணமே இந்திய அணியின் இந்த பிளான்தான் – அபினவ் முகுந்த் பேட்டி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவர் மீது தற்போது சிறிய விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அபிநவ் முகுந்த் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஓமன் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 38 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் யுனைடெட் அரபு அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் பெரிய ரன்களுக்கு அவரால் செல்ல முடியவில்லை.

30 முதல் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவர் மூன்று முறை ஆட்டம் இழந்த நிலையில் பல முன்னாள் வீரர்கள் அவரை சற்று பொறுமை காக்கும் படி அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் இது குறித்து இந்திய முன்னாள் தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் அபிஷேக் ஷர்மா அந்த வகையில் எந்த முயற்சிக்கும் மேற்கொள்ளக் கூடாது எனவும் இதே முறையில் தொடர்ந்து விளையாட வேண்டும் என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முன்னாள் வீரர்கள் பலர் அபிஷேக் ஷர்மாவை அதிக ரன்கள் பெரும் வகையில் நிலைத்தன்மையை காட்டுமாறு கேட்டுக் கொள்வார்கள். ஆனால் இவ்வளவு அதிக ரிஸ்க் கொண்ட ஆட்டத்தை விளையாடினால் அது நமக்கு மிகவும் கடினம். இந்த வீரர் நமக்கு அதிக போட்டிகளை வென்று கொடுப்பார் என்ற புரிதலுக்கு நாம் வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். அவர் நமக்கு பெரிய ஸ்கோர் பெரும் நாளில் நாம் எளிதாக வெற்றி பெறுவோம்.

இதையும் படிங்க:நேற்று இதனால்தான் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வரல.. இந்திய கேப்டனை பாராட்டிய கவாஸ்கர்

கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி எதிர்பார்த்த தொடக்கங்கள் இவைதான். பவர் பிளேவில் அபிஷேக் உங்களுக்கு 80 முதல் 85 ரன்கள் வரை கொடுக்க முடியும். அதனால் நிலைத்தன்மைக்கு கொஞ்சம் விலை கிடைக்கும். ஆனால் இந்திய அணி 8ம் நம்பர் வரிசை வரை பேட்டிங் ஆழம் கொண்டுள்ளது. எனவே அவர் பொறுமையாக விளையாடி என்ன பயன்? எதுவுமே கிடையாது. அவர் எப்போதும் இப்படி விளையாட வேண்டும் 30 ரன்னில் அவுட் ஆவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts