இந்திய கிரிக்கெட்

முகமது ஷமியின் இடத்துக்கு.. இந்த 27 வயசு பையன்தான் சரியான ஆளு.. அச்சு அசலா இருக்கும் – ஜாகீர் கான் கணிப்பு

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் இடத்துக்கு, குறிப்பிட்ட ஒரு இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் மிகப் பொருத்தமாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் தற்போது இரண்டாவது செட் பாஸ்ட் பவுலர்களை உருவாக்க வேண்டிய காலகட்டத்திற்கு வந்திருக்கிறது. இதனால் தற்போது முன்னணியில் இருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒவ்வொருவருக்கும் மாற்று வேகப்பந்துவீச்சாளரை தேடும் வேலைகள் மும்முரமாக ஆரம்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமியின் தனித்தன்மையும் பிரச்சனைகளும்

உலக கிரிக்கெட்டில் முகமது ஷமி பந்து வீசும் பொழுது தையல் மிக நேராக சென்று தரையை தாக்குவது போல வேறு எந்த பந்துவீச்சாளருக்கும் நடக்காது. இந்த அப்ரைட் சீம் காரணமாக பேட்ஸ்மேன்களுக்கு பிடிக்காத ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஷமி இருந்து வருகிறார். அவரை வலைப் பயிற்சியில் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் எதிர் கொள்வதை நிறுத்திவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயத்தில் தற்பொழுது ஷமிக்கு 34 வயதாகிறது. அவர் வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற காரணத்தினால் இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவார்? என்று கூற முடியாது. காயங்கள் அவரைப் பெரிய அளவில் துரத்தி வருகிறது. எனவே அவருடைய இடத்திற்கு மாற்று வீரரை கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

- Advertisement -

ஜாகீர் கான் கண்டுபிடிப்பு

இதுகுறித்து ஜாகீர் கான் கூறும் பொழுது “ஆகாஷ் தீப் நேராக ஸ்டெம்பை தாக்க நினைக்கிறார். முகமது ஷமியும் இப்படியான பந்துவீச்சு கொண்டவர்தான். ஆகாஷ் தீப் ஷமிக்கு ஒரு மாடலாக இருக்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் சாமி வெற்றி பெற்ற விதத்தை பாருங்கள், அவரைப்போலவே ஆகாஷ் தீப் தையலை பயன்படுத்தி பந்து வீசுகிறார்”

இதையும் படிங்க : கேரி கிரிஸ்டன் சொல்ற அந்த மாதிரி கிடையாது.. நான் சோம்பேறி இல்ல – ஷாகின் அப்ரிடி மறைமுகமான எதிர்ப்பு

“நீங்கள் குட் லென்த்தில் ஸ்டெம்பை தாக்கி பந்து வீசும் போது உங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். ஷமி இப்படித்தான் வெற்றி பெறுகிறார். இவருடைய இடத்திற்கு சரியான ஒரு வீரரை தேடினால் ஆகாஷ் தீப்புதான் மிகவும் சரியானவராக இருப்பார். மேலும் ஆகாஷ் தீப் டயிலைப் பயன்படுத்தி பந்து வீசுவது குறித்து நிறைய பேசப்படுகிறது. அதே சமயத்தில் சக வேகப்பந்துவீச்சாளர்களுடன் உரையாடினால் சில வேரியேஷன்களையும் கற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by