கிரிக்கெட்டை தொடர்ந்து தாண்டி பிரபல விளையாட்டில் கால்தடம் பதிக்கவுள்ள யுவராஜ் சிங் – ரசிகர்களிடம் அவர் பேசிய வீடியோ இணைப்பு

0
33

ஜூன் 30 முதல் ஜூலை 1ஆம் தேதி வரையில் ஐகான்ஸ் கோல்ஃப் சீரியஸ் நடைபெற இருக்கின்றது. யுஎஸ்ஏ அணியும் உலக அணியும் மோத இருக்கின்றன. இரண்டு அணியிலும் தலா 12 பிரபல வீரர்கள் இருப்பார்கள்.

மைக்கேல் பெல்ப்ஸ், மைக்கேல் ஸ்ட்ரஹான், கனெலோ அல்வாரெஸ், ஆஷ் பார்டி, பெப் கார்டியோலா, ஹாரி கேன் மற்றும் யுவராஜ் சிங் என உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்ற விளையாட போகின்றனர்.

ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த யுவராஜ் சிங்

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்கள் மத்தியில் யுவராஜ் சிங் எப்பொழுதும் முன்னிலையில் இருப்பார். அவர் கிரிக்கெட்டை தாண்டி கோல்ப் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரும் இந்த ஐகான்ஸ் தொடரில் பங்கெடுத்து கொள்ளப் போகிறார்.

இந்த தொடரில் பங்கேற்று விளையாடி அதைத்தொடர்ந்து தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் உள்ள இந்திய ரசிகர்கள் அனைவரையும் தனக்கு ஆதரவு தெரிவிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.இத்தொடர் நியூ ஜெர்சியில் உள்ள லிபர்டி தேசிய கோடி கிளப்பில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் பெயரை தந்தையர் தினத்தில் வெளியிட்ட யுவராஜ் சிங்

சமீபத்தில் யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஓரியன் கீச் சிங் என்ற பெயரை அவர்கள் சூட்டியுள்ளார்கள். மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் வலை தளத்தில் பதிவிட்டு, ஓரியன் கீச் சிங் உலகத்திற்கு உன்னை அழைக்கிறேன் என்று பாசமாக கூறியுள்ளார். நட்சத்திரங்களுக்கிடையில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருப்பதைப் போல உங்கள் கண்கள் ஒவ்வொரு புன்னகையிலும் மின்னும் என்றும் தன் மகனின் சிரிப்பைப் பற்றி சந்தோஷம் பொங்க யுவராஜ் சிங் குறிப்பிட்டிருந்தார்.