இந்திய கிரிக்கெட்

ரோகித் யாரிடமும் கேட்டு இந்த முடிவை எடுக்க மாட்டார்.. அவரை எனக்கு நல்லா தெரியும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுதீப் தியாகி தன்னுடன் விளையாடிய சகவீரர் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில் அதற்குப் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டிலும் ரோகித் சர்மா தோல்வி அடைந்ததால் ரோஹித் சர்மா தனது கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க நேரம் வந்துவிட்டது எனவும் விமர்சனங்கள் வெளிவந்தது.

இந்த சூழ்நிலையில் அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ரோகித் சர்மா தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன் டிராபி தொடரை வெற்றி பெற்று அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுதீப் தியாகி ரோஹித் சர்மா ஓய்வு முடிவை யாருடனும் கேட்டு முடிவு செய்ய மாட்டார் எனவும் தனது உள் உணர்வின்படி செயல்படக் கூடியவர் என சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுதீப் தியாகி கூறும் போது ” ரோகித் சர்மாவை எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நன்றாக தெரியும். அவர் யாரிடமும் கேட்டுவிட்டு உடனடியாக ஓய்வு முடிவை அறிவிக்காத ஒரு மனிதர். அவரது கேப்டன்சி ஸ்டைல் வித்தியாசமாக இருப்பதால் அவர் இன்னும் சிறிது காலம் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் தனது இரண்டு ஐசிசி கோப்பைகள் மூலம் அனைவரையும் அமைதிப்படுத்தி உள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தற்போது வலுவான நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:கோலியோ வருணோ இல்லை.. இந்திய அணி அற்புதமா செட் ஆக இவர்தான் மிக முக்கிய காரணம் – ரிக்கி பாண்டிங் பாராட்டு

ஆனால் அந்த சமயத்தில் நீங்கள் திரும்பி பார்த்தால் எங்களிடம் ஜாகிர் கான் பாய், இர்பான் பதான் பாய் என்று எங்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அப்போது சமூக வலைதளங்கள் பெரிதாக இல்லை. அதனால் தான் அப்போது சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்த போதும் அவர்கள் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தனர்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by