கபில் தேவ், தோனி ஜெயிச்ச பட்டங்களை ஒப்பிட்டா.. இந்த t20 உலக கோப்பை ஒன்னுமே இல்லை.. இந்திய முன்னாள் வீரர் அதிரடி

0
138

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய t20 கிரிக்கெட் அணி, டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. மேலும் மூன்று முறை டி20 உலக கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்றும் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்றும் சாதனைகளை படைத்தது.

இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டி மற்ற உலகக் கோப்பைகளை இந்திய அணி ஜெயித்ததை காட்டிலும் சற்று ஆர்வம் குறைவுதான் என்று இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது கருத்தை ட்விட்டர் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த உலகக் கோப்பையை ஒப்பிடும்போது கபில்தேவ் மற்றும் எம்எஸ் தோனி தலைமையில் பண்ற உலகக் கோப்பைகள் பெரிது என்கிற ரீதியில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “காலப்போக்கில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த உலகக்கோப்பைகளை நாம் சரியான கண்ணோட்டத்தில் வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவின் டி20 உலக கோப்பை வெற்றிகள், 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான உலகக் கோப்பை வெற்றி மற்றும் 2011 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான உலகக் கோப்பை வெற்றி ஆகியவைகளை ஒப்பிடும்போது இது சற்று மங்கியது போல் உள்ளது.

அதன் புனிதம் மற்றும் தூய தன்மையை ஒப்பிடும்போது, இது அதற்கான வடிவத்தை சற்று இழந்து விட்டதாக தோன்றுகிறது. மெதுவாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஆண்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டங்களின் வடிவம் மனதில் இடம் பெறுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி” என்று தர வரிசையிட்டு இருக்கிறார்

- Advertisement -