இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம் இந்தியா அணியின் தற்போதைய கேப்டன் ரிஷப் பன்ட் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடரை இழக்க கூடாது என்றால் இந்திய அணி இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சிக்கலில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுப்மான் கில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட சுழுக்கு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவற விட, அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழி நடத்த உள்ளார். இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம் முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “அவர் சிறப்பாக வளர்வதை நான் காண விரும்புகிறேன். ஒரு கேப்டனாக பண்ட் சிறப்பாக செயல்படுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் ஏற்கனவே துணை கேப்டனாக இருப்பது உங்கள் அனுபவத்திற்கு மதிப்பு சேர்க்கிறது. ஒரு விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் இயல்பாகவே நீங்கள் ஒரு தலைவராக இருப்பீர்கள். இருப்பினும் அவர் தனது திறன்களை நிலை நிறுத்துவது அவசியம். அவர் விரைவாக கற்றுக் கொள்வார்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகள்.. தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் இல்லை
பும்ரா மற்றும் ஜடேஜாவை முயற்சிப்பதற்கு பதிலாக முதல் அரை மணி நேரத்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுப்பதில் திரும்பிப் பார்ப்பார் என்று நம்புகிறேன். அந்த முக்கியமான தருணங்களை நீங்கள் தவறவிட முடியாது என்று நான் நம்புகிறேன். இந்த டெஸ்ட் போட்டியிலும் 75 முதல் 78 ஓவர்கள் வரை தான் வீசப்படுவோம் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 90 ஓவர்களில் நீங்கள் எவ்வளவுதான் பிழிந்தாலும் குறிப்பாக நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதை நடப்பதாக நான் பார்க்கவில்லை” என்று அவர் பேசி இருக்கிறார்.