ஸ்ரேயாஸ் ஐயர் அவரை நம்பாதது தான்.. பஞ்சாப் அணியின் தொடர் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணம் – இந்திய முன்னாள் வீரர்

0
207

நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி குறித்து இந்திய முன்னாள் வேக பந்துவீச்சாளர் மோகித் சர்மா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 59 ரன்கள் குவித்தார். தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தது. ஆனால் அதனை டெல்லி பேட்ஸ்மேன்கள் தவிடு பொடியாக்கினார்கள்.

கேப்டன் அக்சார் பட்டேல் 56 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 51 ரன்கள் இன குவித்து டெல்லி அணியின் வெற்றியை எளிதாக்கினர். இந்த போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு ஓவர் கூட அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சகாலை பயன்படுத்தவில்லை. இது தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் பஞ்சாப் அணியின் நேற்றைய தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என இந்திய முன்னால் பவுலர் மோகித் சர்மா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் போது “நீங்கள் சகாலுக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பளிக்கவில்லை அவர் ஒரு சாம்பியன் பவுலர். இந்த முடிவுதான் பஞ்சாப் அணியை தோல்வியின் விளிம்புக்கு கொண்டு சென்றது என்று நான் நினைக்கிறேன். சிறிய மைதானமோ பெரிய மைதானமோ வேகப்பந்து வீட்டுக்கு சாதகமான ஆடுகளமோ அல்லது சுழலுக்கு சாதகமான ஆடுகளமோ என எதுவாக இருந்தாலும் அவர் சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.

கேப்டனாக நீங்கள் முன்கூட்டியே செயல்பட வேண்டும். பஞ்சாப் அணிக்கு தற்போது சிறந்த பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருக்கிறார்கள். எனவே அவருக்கு நம்பி வாய்ப்புகளை வழங்க வேண்டும் மிடில் ஓவர்களில் பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்களை அதிக அளவில் நம்புவதால் அதிக அடி வாங்கியுள்ளது. எனவே தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர்கள் இதை ஆலோசிக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -