இந்திய கிரிக்கெட்

அவர் என்ன தப்பு செஞ்சாரு.. இது நியாயமே இல்லை.. கம்பீர் சரியான விளக்கம் தருணம் – இந்திய முன்னாள் வீரர் வருத்தம்

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிக்கப்பட்டது முதலே கலவையான விமர்சனங்களை முன்னாள் இந்திய வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அக்சார் பட்டேல் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

விமர்சனத்தில் இந்திய அணி

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அக்சார் பட்டேல் அமைந்தார். மேலும் பந்துவீச்சிலும் கலக்கி ஆல் ரவுண்டர் பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுத்தார். மேலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவரது திறமையை கண்டு இந்திய அணி இவரை துணை கேப்டனாக அறிவித்தது.

சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆன இந்திய டி20 அணி அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் அதற்கு ஒரு முன்னேற்பாடாக ஆசிய கோப்பை தொடர் தற்போது டி20 தொடரில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியின் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் துணை கேப்டனாக இருந்த அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

சரியான விளக்கம் வேண்டும்

இது பல முன்னாள் இந்திய வீரர்கள் இடையே அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் டி20 ஸ்பெசலிஸ்ட் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழ்நிலையில் அக்சார் பட்டேல் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய அணி நிர்வாகம் அவருக்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இதெல்லாம் டீமா.? இந்த அணியை வச்சிட்டு டி20 உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பே இல்லை.. முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆதங்கம்

இதுகுறித்து முகமது கைப் விரிவாக கூறும் போது “துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சார் பட்டேலுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருக்கும் எனவும், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அது அவருக்கு தெரியப்படுத்தப்படாது எனவும் நான் நம்புகிறேன். அக்சார் எந்த தவறும் செய்யவில்லை. எனவே அவர் அந்த விளக்கத்திற்கு மிகவும் தகுதியான நபர்” என்று எனக்கு தோன்றுகிறது என்று முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by