ஐபிஎல் 2025

அடிச்சு சொல்றேன்.. பஞ்சாப் கிங்ஸ் முதல் 2 இடத்தில் இருந்தாலும்.. ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.. காரணம் இதுதான் – மனோஜ் திவாரி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் நான்காவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து முடித்திருக்கும் நிலையில் கொல்கத்தா அணியின் பேட்டிங் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் முதலில் பேட்டிங் செய்து முடித்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

பஞ்சாப் அணியின் வினோத வேலை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப் சிம்ரன் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் விக்கட்டுக்கு 11.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தனர். அதற்குப் பின்னர் 14.3 ஓவர்களில் 160 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் ஃபார்மில் இருந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன இந்திய வீரர் நெகல் வதேரா அனுப்பப்படாமல் அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் அனுப்பப்பட்டார்.

அவர் ஏற்கனவே ஃபார்ம் இல்லாத காரணத்தால் சில போட்டிகளில் விளையாடாத நிலையில் இந்தப் போட்டியில் மீண்டும் வாய்ப்பு பெற்று விளையாடினார். ஆனால் 8 பந்துகளை வீணடித்த அவர் 7 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் அவருக்குப் பிறகு சஷாங்க் சிங் அனுப்பப்படாமல் பந்துச்சு ஆல் ரவுண்டர் மேற்கோ ஜான்சன் அனுப்பப்பட்டது பெரிய கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இந்த செயல்பாடு குறித்து தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கப் அடிக்க வாய்ப்பே இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த சீசனில் பஞ்சாப் அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது என்று எனது உள் உணர்வு சொல்கிறது. ஏனென்றால் இன்று அவர்கள் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தபோது நான் பார்த்த விஷயம் என்னவென்றால், பயிற்சியாளர் இந்திய வீரர்களான நெகல் வதேரா மற்றும் சஷாங்க் சிங் ஆகிய பார்மில் இருந்த வீரர்களை நம்பாமல் தனது வெளிநாட்டு வீரர்களை நம்பினார்.

இதையும் படிங்க:14 ஓவரில் 160 ரன்.. ஆட்டத்தையே கெடுத்த பாண்டிங்கின் மோசமான முடிவு.. இந்த வேலை உங்களுக்கு தேவையா.? விளாசும் ரசிகர்கள்

இதனால் இது இந்திய வீரர்களின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாததைக் காட்டுகிறது. அவர் இதே வழியில் செயல்பட ஆரம்பித்தால் பஞ்சாப் அணி முதல் இரண்டு இடங்களைப் பிடித்தாலும் அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது” என்று சமூக வலைதளத்தில் தனது பதிவினை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts