இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த தற்போது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேர்வு குழு தலைவருமாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கௌதம் கம்பீர் குறித்த சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணி முன்னணி அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு இடையில் சிறிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்றாலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற முக்கிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்திருக்கிறது.
இதற்கு கெளதம் கம்பீரின் தவறான அணுகுமுறையே இந்திய அணியின் டெஸ்ட் சரிவுகளுக்கு முக்கிய காரணம் என்ற கருத்துக்கள் மேலோங்கி உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னால் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கௌதம் கம்பீர் கருத்துக்களை மாறி மாறி பேசி இருக்கிறார் என்று கூறுகிறார். மேலும் அவரிடம் ஒரு நிலைத்தன்மையற்ற செயல்பாடு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதேபோல அதற்கு முன்னரே ரோஹித் சர்மாவும் ஓய்வு பெற்றார். அந்த சமயத்தில் சுப்மான்கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் நான் விராட் கோலி கேப்டன் ஆக ஆக்குங்கள், அவர் மீண்டும் நிலைத்தன்மையை கொண்டு வரட்டும், அதன் வழி முன்னேறுங்கள் என்று நான் பரிந்துரைத்தேன்.
இதையும் படிங்க:டி20 வீரர்களால் டெஸ்ட் ஆட முடியாது.. இங்கிலாந்தில் நடந்தது போல் பிட்ச் ரெடி பண்ணுங்க.. ஹர்பஜன் கருத்து
ஆனால் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் தனிமனித வழிபாட்டை என்றைக்குமே நான் நம்பியதில்லை என்று கூறினார். அவர் பேசிய கருத்து உலகம் முழுவதுமே தெரியும். நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ள முடியாது, மோசமான கிரிக்கெட் விளையாடினீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். ஒரு போட்டியில் அக்சார் பட்டேல் நன்றாக விளையாடினார், ஆனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆனால் அவர் நன்றாக விளையாடிய போட்டியில் நீங்களே அவரை பாராட்டி பேசினீர்கள். அதனால் கம்பீர் ஒரு நாள் ஒரு விஷயத்தையும் மறுநாள் வேறு விஷயத்தையும் மாற்றி பேசுகிறார்” என்று ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.






