சிஎஸ்கே மாதிரியே படுமோசமா இருந்துட்டு.. இப்பவும் ஏன் இந்த தப்பை செஞ்சீங்க.. ஐபிஎல் அணியை விமர்சித்த ஸ்ரீகாந்த்

0
218

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து ஐபிஎல் அணியினரும் ஏறக்குறைய தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி நிறைவு செய்துவிட்டனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே போல மோசமான நிலையில் இருந்த ஒரு குறிப்பிட்ட அணி இந்த முறையும் சில தவறுகள் செய்திருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கேமரூன் கிரீணை கொல்கத்தா அணி அதிகபட்சமாக 25.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 28.20 கோடி ரூபாய்க்கு இந்திய இளம் வீரர்களை வாங்கி ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிலையில் முதல் சுற்றில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை 2 கோடி ரூபாய்க்கு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் இறுதிக்கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 கோடி ரூபாய்க்கு அவரை எடுத்தது. இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவரும் கிரிக்கெட் வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் லியம் லிவிங்ஸ்டனை வாங்க வேண்டிய தேவை என்ன? எனவும் பந்துவீச்சில் கவனம் செலுத்த தவறிய சன்ரைசர்ஸ் அணிக்கு 20 ஓவர்களை யார் வீசப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “லிவிங்ஸ்டனை அனைத்து அணிகளும் அடிப்படை விலைக்கு வாங்காமல் விட்டுவிட்டனர். நினைத்திருந்தால் அவரை அடிப்படை விளையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கி பணத்தை மிச்ச படுத்தி இருக்கலாம். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது ஆனால் அந்த அணிக்கு 20 ஓவர்களையும் முழுமையாக வீசப் போவது யார்?

இதையும் படிங்க:நாங்கள் தோனியை தாண்டி விட்டோம்.. இதை 2 ஆண்டு கிடையாது 6 ஆண்டு திட்டம் – ஸ்டீபன் பிளமிங் பேச்சு

சன்ரைசர்ஸ் அணிக்கு லிவிங்ஸ்டன் போன்ற ஒரு வீரர் தேவைதானா?. முகமது சமியை ஏற்கனவே லக்னோ அணிக்கு கொடுத்து விட்டனர். அவர்கள் இன்னும் இதை சிறப்பாக திட்டமிட்டு இருக்கலாம். அவர்களிடம் ஏற்கனவே ஒரு நல்ல அணி இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் கடந்த ஆண்டு சிஎஸ்கே போலவே அவர்களும் படுமோசமான நிலையில் இருந்தனர் என்பது தான் உண்மை” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -