19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆட்டக்களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஐபிஎல்லில் இந்த இரண்டு வீரர்களை விடுவிப்பது நல்லது என்ற சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் எந்த வீரரை வாங்குவது எந்த வீரரை விடுவிப்பது என்று அதற்கான முதல் கட்ட ஆலோசனைகளை துவங்கி உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வெற்றி பெற்று சரித்திரம் படைத்திருக்கின்றன. இதில் இந்த வருடம் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானோர் தங்களது தொகைக்கு ஏற்ப விளையாடவில்லை என்பது முற்றிலுமான உண்மை. அந்த வரிசையில் கொல்கத்தா அணிக்காக 23. 75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் போதுமான பங்களிப்பை கொல்கத்தா அணிக்கு வெளிப்படுத்தவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தீபக் சாகர் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “வெங்கடேஷ் ஐயர் என்னை பொருத்தவரை ஒரு வர்த்தகம் செய்யக்கூடிய வீரர் கிடையாது, அவர் விடுவிக்கப்பட வேண்டும். எந்த அணியும் அவரை டிரேடிங் முறையில் வாங்க மாட்டார்கள். அவர் விடுவிக்கப்பட்டால் எளிதாக 3 கோடி ரூபாய்க்கு எந்த அணியும் பெற முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பாக செயல்படவில்லை. அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடினார். போட்டி முழுவதுமாக கடந்த இரண்டு சீசன்களில் அவர் பெரிதாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை. அவர் கொல்கத்தா அணிக்கு வந்த போது ஒரு அதிரடியான தொடக்க வீரராக இருந்தார்.
இதையும் படிங்க:சூர்யகுமார் பற்றி அப்படி சொன்னால்,நான் ஒத்துக்க மாட்டேன்.. இர்பான் பதான் உறுதி.. கில் பேட்டிங்கை மாற்றிவிட்டதாக கருத்து
மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக தீபக் சகாரை விடுவிக்க வேண்டும். அவர் ஓடவோ அல்லது ஃபீல்டிங் செய்யவோ சிரமப்படுகிறார். பாதி நேரம் அவர் உடல் தகுதி இல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார். நானாக இருந்தால் அவரை ஏன் அணியில் வைத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புவேன். ஆனால் எம்ஐ ஒரு செட் செய்யப்பட்ட அணி” என்று அவர் பேசியிருக்கிறார்.






