இந்த மாதம் இறுதியில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கர்நாடக மாநில அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் விளையாடிய முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் தேர்வில் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 15 பேர் கொண்ட டி20 இந்திய அணியில் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் இந்தியா அணியில் அவர் ஓய்வு கேட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணியில் சிவம் துபேவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மேலும் விக்கெட் கீப்பர்களாக கேஎல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இதில் சிவம் துபேவையும் ரிஷப் பண்டையும் தேர்வு செய்தது பெரிய சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஏனென்றால் இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடிய ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருந்தார். அந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் சிவம் துபே அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரது இடம் சஞ்சு சாம்சங் ஒதுக்கப்பட வேண்டியது. ஆனால் கடைசியாக அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சிறப்பாக விளையாடி இருந்த பொழுதும் வழக்கம்போல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்திய டி20 அணியிலும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. இங்கிலாந்து ஒரே நாளில் 416 ரன்.. போப் டக்கெட் தெறி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் பரிதாபம்
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கூறும் பொழுது “ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் சஞ்சு சம்சனுக்கு பதிலாக சிவம் துபேவை தேர்வு செய்தது கேலிக்கூத்தானது. பாவப்பட்ட சஞ்சு சாம்சன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தார். அவருக்கு ஏன் இப்படியே செய்கிறீர்கள்? என்னுடைய இதயம் அவருக்கு ஆதரவாகத்தான் செல்கிறது” என்று கூறியிருக்கிறார்.






