கம்பீர் வார்னேவ ஞாபகம் இருக்கா?.. அப்படினா இங்கிலாந்துல இத செய்யுங்க அசத்தலாம் – பரத் அருண் அறிவுரை

0
85
Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பவுலிங் யூனிட்டில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் குறித்து இந்திய முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பேசியிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து சென்றுவிட்ட இந்திய அணி இன்று முதல் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் இடம் பெற்று சில வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்து அணியினர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். தற்போது அவர்களும் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியை காப்பாற்றுவது யார்?

தற்போது இந்திய அணியை காப்பாற்றக்கூடிய இடத்தில் பேட்டிங் யூனிட் இல்லை. இந்திய பேட்டிங் யூனிட் மிகவும் எளிமையானதாக அனுபவம் அற்றதாக காணப்படுகிறது. அதே சமயத்தில் இந்திய பவுலிங் யூனிட்டில் நல்ல அனுபவம் இருக்கிறது. எனவே ஆரம்ப கட்டத்தில் இந்திய அணிக்கு பவுலிங் யூனிட்தான் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்திய அணியின் தேர்வுக் குழு எந்த விதத்திலும் தவறு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது தெரியவருகிறது. குறிப்பாக மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் குல்டீப் யாதவை அழைத்துச் சென்று இருப்பது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய நிர்வாகம் இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து பேசி இருக்கும் பரத் அருண் கூறும் பொழுது “மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் எப்பொழுதுமே சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தில் அவர்களுடைய செயல்பாடு சிறப்பாக இருந்திருக்கிறது. போட்டியின் ஆரம்பகட்டத்தில் விக்கெட்டில் கொஞ்சம் ஈரம் இருக்கும் பொழுது கூட மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும். மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் உண்டாக்கும் கால் தடங்களை வைத்து பந்து வீசுவதும் ஒரு கலை”

இதையும் படிங்க: 268 ரன்.. கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தில்.. ரிஷப் பண்ட் செய்யவிருக்கும் மெகா சாதனை.. கில்கிறிஸ்ட் தோனி ரெக்கார்டுகள் காலி

“இது வெறும் பந்துவீச்சை பற்றியது மட்டுமே கிடையாது. இது குறித்து பேசும்போது இங்கிலாந்தில் வார்னே என்ன செய்திருக்கிறார் என்பதும் நமக்கு ஞாபகத்தில் வரும். இதை வைத்து பார்க்கும் பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு தேவையான திறமைகளை வைத்திருக்கிறார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். எனவே நாம் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -