விராட் கோலியால முடியல.. அந்த நபரும் சரி பண்ணல.. வெளியே இருந்துதான் ஆள் வரணும் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

0
82

இந்திய கிரிக்கெட் அணி நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக விராட் கோலி மூன்றாவது போட்டி முடிந்த அடுத்த நாளே தனது பயிற்சியை துவங்கியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு டி20யில் ஒய்வை அறிவித்த விராட் கோலி தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி கடந்த நான்கு வருடங்களாகவே சரிவை சந்தித்து வருகிறார்.

கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் மோசமாக விளையாடிய கோலி அதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்திருந்தாலும் அதற்குப் பிறகான இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி குறித்து நான் இனி பேசப்போவதில்லை எனவும், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சரியாக செயல்படவில்லை எனவும் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

வெளியே இருந்து உதவி தேவை

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி என்னும் நவீன காலப் பெரியவர் தனது பிரச்சனையை கண்டுபிடித்து சரி செய்வார் என்பது உண்மை அல்ல. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் அவர் சரி செய்து இருப்பார். அதனால் தான் இனி நான் கோலியின் பிரச்சனையில் கவனம் செலுத்தப் போவதில்லை. ஆனால் அவரது பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய நபர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர். இந்த நாட்பட்ட பிரச்சனைகளை அவரால் தீர்க்க முடியவில்லை என்றால் இது ஒரு தொழில்நுட்ப பிரச்சனையாக இருக்கக்கூடும்.

இதையும் படிங்க:சாதனை படைத்த சச்சின் மகன்.. ஒயிட் பால் கிரிக்கெட்டில் அபாரம்.. விஜய் ஹசாரே டிராபி 2024- 25

எனவே அவரால் இதை தீர்க்க முடியவில்லை என்றால், விராட் கோலிக்கு உதவி வெளியே இருந்து தேவைப்படுகிறது என்று தெளிவாகத் தெரிகிறது. அவரால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை” என்று சஞ்சய் மஞ்சுரியர் கூறுகிறார். இதற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா விராட் கோலி தனது பிரச்சினையை கண்டறிந்து தானே சரி செய்து கொள்வார் என்று கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -