இந்திய கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மாதம் முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் இதற்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் இந்திய அணி எட்டு நாடுகள் பங்கு பெறும் ஆசிரியர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மான் கில் டி20 தொடருக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த அணியில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. டி20 தொடரை பொருத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்று கொடுத்தவர் மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று அந்த அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் டி20 அணியில் இடம் பெறாததற்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு சிரமமாக இருக்கும் காரணங்களில் ஒன்று அவர் தலைமை பண்புகளை அணிக்குக் கொண்டு வருகிறார். தற்போது இந்திய அணிக்கு வேறு ஒருவர் மூலமாக அந்த திறமை கிடைத்துள்ளது. இது இளைய வீரர் ஒருவரை இந்திய அணிக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அவரை நிர்வகிப்பதற்கான வாய்ப்பு எளிதாக இருக்கும்.
இதையும் படிங்க:மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தோனி.. 4 ஆண்டுகளுக்கு பிறகு பிசிசிஐ எடுக்கும் முடிவு
அவர் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பதால் இந்திய அணிக்கு வருவதற்கு சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் அவர் டி20 ஃபார்மெட்டில் தொடர்ந்து ரன்கள் குவித்தால் நிச்சயமாக இந்திய அணியில் விளையாட முடியும்” என்று அவர் கூறுகிறார். அதாவது ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை பண்பில் சிறந்தவராக இருப்பதால்தான் இந்திய அணிக்குள் அவரால் வர முடியவில்லை என்று வெளிப்படையாகவே தனது கருத்தை மாண்டிபனேசர் தெரிவித்திருக்கிறார்