இந்திய கிரிக்கெட்

இனி இந்திய கிரிக்கெட்டுக்கும் மற்ற நாடுகள் கிரிக்கெட்டுக்கும் பெரிய இடைவெளி உருவாகும்.. ஒன்றுமே செய்ய முடியாது – இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக t20 உலக கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் இருந்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் பின் இந்த உலகக் கோப்பை அணி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியை தவிர மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை தன் வசம் வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மேலும் மொத்தமாக டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பிளேயிங் லெவனில் விளையாடிய வீரர்கள் தவிர, பெஞ்சில் அமர வைக்கப்பட்ட நான்கு வீரர்களுமே சர்வதேச அளவில் தங்களது திறமையை பெரிய அளவில் நிருபித்திருக்கின்றனர். உதாரணமாக சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த t20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற பெரும் காரணமாக அமைந்தார். அவருக்கே இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இதுகுறித்து ஸ்டீவன் பின் கூறும்போது “பெஞ்சில் அமர்ந்த பிறகு பாருங்கள். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் யாதவ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மற்ற டி20 உலக அணிகளில் ஏதாவது ஒன்றில் அவர்களை ஆடி இருந்தால் கூட ஒரு ஆட்டத்தில் விளையாடி இருக்கலாம். அதன் ஆழம் மிகவும் பயங்கரமானது. மற்ற நாடுகள் தொடர்ந்து விளையாட முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறும் போது “ஜெய்ஸ்வால் இந்த அணியில் கிடையாது. ரிஷப் பண்ட், கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த அணியில் கிடையாது. அவர்கள் ஓய்வு பெற்று விட்டனர். இந்திய அணியின் பலமும் ஆழமும் மிகச்சிறப்பாக உள்ளது. இளம் வீரர்கள் அனைவரும் பெரிய கூட்டத்திற்கு முன்னால் சிறப்பாக விளையாட கற்றுக் கொள்கிறார்கள். இது இப்போது ஐபிஎல் நம்பித்தான் ஆக வேண்டும் என்று இருக்கிறது. இதனால்தான் இந்தியாவிற்கும் பிற பகுதிகளுக்கும் இடையேயான இடைவெளி பெரிதாக கொண்டே போகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by