இந்தியாவில் சச்சினுக்கு பிறகு.. இதை செய்தது விராட் கோலிதான்.. அவர் இல்லாதது பேரிழப்பு – இங்கி மொயின் அலி பேட்டி

0
67

இந்தியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இல்லாமல் இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி இங்கிலாந்து அணிக்கு சாதகமான விஷயங்கள் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இரு வீரர்கள் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் ஐகான் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவிக்க, அதற்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெறுகிறார் என்கிற தகவல் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில் பிசிசிஐ அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்தது.

ஆனால் தனது முடிவில் மாறாத விராட் கோலி நேற்று சர்வதேச டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் அடுத்த மாதம் இங்கிலாந்தில் பயணம் செய்யும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மொயின் அலி கருத்து

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு சிறந்த வீரர்கள் இங்கிலாந்தில் சில முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ரோகித் கடைசியாக இங்கிலாந்தில் விளையாடிய போது சிறப்பாக செயல்பட்டார் என்று எனக்கு நினைவிருக்கிறது. அவர்களிடம் உள்ள அபார தலைமைத்துவ குணம் இந்திய அணி நிச்சயமாக மிஸ் செய்யும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க:நம்மில் பலர் தயங்குவோம்.. ஆனா விராட் கோலி இந்த விஷயத்தை கூச்சமே இல்லாமல் செய்வார் – இந்திய முன்னாள் வீரர்

இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மிகப்பெரிய அடியாாகும். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் சென்றதில் அவரது பங்கு மிகப் பெரியதாகும். அவரது வாழ்க்கை இதற்குப் பிறகு சிறப்பாக அமைய வேண்டும். அவர் விளையாட்டுக்காக நிறைய விஷயங்கள் செய்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக மைதானத்தில் அதிக ரசிகர்கள் கூடுகிறார்கள் என்றால் அது விராட் கோலிக்காக தான் இருக்கும். அவரது பாணி மற்றும் கேப்டன்ஷிப்பில் அவரது அணுகுமுறை என்பது சிறப்பான விஷயமாகும். இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய அடி” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -