உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முன்னணி நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்த டெஸ்ட் அட்டவணை குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2024-25
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இதுவரை இரண்டு சீசன்கள் நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்ற வருகிறது. இதில் இரண்டு முறையும் இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற இந்திய அணி முதல் முறையாக நியூசிலாந்து அணியிடம் தோல்வியும் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி தற்போது இறுதிப் போட்டியில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டின் முன்னணி நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து இரண்டு முறையும் இறுதி போட்டியில் தகுதி பெறவில்லை.
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை தனக்கு திருப்திகரமாக இல்லை என்று சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் தகுதி பெறவில்லை என்பதற்காக தான் இதை கூறவில்லை என்றும், ஆனால் இதில் சில மாற்றங்கள் தேவை என்று அதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.
அட்டவணை சிறப்பாக இல்லை
இது குறித்து விரிவாக கூறும்போது “டெஸ்ட் கிரிக்கெட் என்பது சிறப்பான ஒன்று. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அப்படி சிறப்பானதாக இல்லை. எனக்கு இந்த திட்டம் பிடித்துள்ளது ஆனால் இதை செயல்படுத்துகிற விதம் நன்றாக அமையவில்லை என்று உணர்கிறேன். பென் ஸ்டோக்ஸ் இது குறித்து கருத்து கூறி நிறைய எதிர்வினைகளை பெற்றார். ஆனால் இதனை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது ஒவ்வொரு அணியும் வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்டங்களை விளையாடுகின்றன. இது ஒரு முடிவையோ நியாயமான அட்டவணையையோ உருவாக்கவில்லை. மேலும் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை என்பதற்காக நான் இதை புலம்பவில்லை.
இதையும் படிங்க:அஸ்வின் கணிப்பை உண்மை ஆக்கிய 30 வயது வீரர்.. 9வது வீரராக பேட்டிங்கில் அபார சாதனை.. பாக் தென்னாப்பிரிக்கா டெஸ்ட்
ஒவ்வொரு அணியும் ஆண்டுக்கு 10 முதல் 12 வரை உள்ள ஆட்டங்களை ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரே எண்ணிக்கையில் விளையாடும் இரண்டு அடுக்கு முறை வேண்டும் என்று நான் வாதிட்டேன். குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் ஒவ்வொரு ஆட்டமும் நான்கு நாட்கள் இருக்கும்படி வேண்டும் என்று கூறினேன். இதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன், நான்கு நாள் ஆட்டம் இந்த தொடருக்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். 2024 ஆம் ஆண்டு இரண்டாவது சுழற்சியில் கபாவில் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அந்த ஆட்டம் நான்கு நாட்களுக்குள் முடிவடைந்திருக்கும் ஏனென்றால் அது அருமையாக ஆடுகளமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






