எட்டு நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தற்போது ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடரானது அடுத்த மாதம் 9ம் தேதி முதல் டி20 வடிவில் நடைபெற உள்ளது. டி20 உலக கோப்பைக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடாக இந்த டி20 தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி குறித்து கலவையான விமர்சனங்களும் வெளிவந்துள்ளது.
முன்பு துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்சார் பட்டேல் இந்த முறை நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மான்கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித்ராணா மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போதைய இந்திய அணி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போதைய அறிவிக்கப்பட்ட இந்திய அணியுடன் நாம் ஆசிய கோப்பையை வேண்டுமானால் வெல்லலாம். ஆனால் டி20 உலக கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த அணியை டி20 உலக கோப்பைக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்களா? ஆறு மாதங்கள் கூட இல்லாத டி20 உலக கோப்பைக்காண இந்திய அணி இதுதானா? இவர்கள் தற்போது பின்னோக்கி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பையில் வெல்வது இவர் கையில் மட்டும் தான் இருக்கு.. முன்னாள் பயிற்சியாளர் பாராட்டு
துணை கேப்டன் பதவியில் இருந்த அக்சார் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். சிவம் டுபே, ரிங்கு சிங், ஹர்சித் ராணா எப்படி வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இது ஐபிஎல் தேர்வுக்கான முக்கிய அளவு கோலாக கருதப்படுகிறது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பே செயல் திறனை கருத்தில் கொண்டதாக தெரிகிறது” என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.