இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி சாம்பியன்ஸ் டிராபியில் தனக்கு மற்றும் ஒரு போட்டிதான் எனவும் அது குறித்து ஆழமாக சிந்திக்கவில்லை எனவும் கூறியதற்கு ரவி சாஸ்திரி மறுத்து பேசி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அதற்குப் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது நினைவு இருக்கலாம். எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்கள் கிரிக்கெட் வல்லுனர்கள் என அனைவரிடையையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் ஆக்ரோஷம் நிச்சயமாக இருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கம்பீர் இந்தப் போட்டி குறித்து தான் அதிகம் சிந்திக்கவில்லை எனவும் சாம்பியன்ஸ் டிராபியில் இதை மற்றும் ஒரு போட்டியாக மட்டுமே பார்ப்பதாக கூறி இருந்தார். ஆனால் இது குறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் 7 வருடங்கள் பயிற்சியாளராக இருந்ததாகவும் எனவே தனக்கு என்ன நிலைமை என்று தெரியும் எனவும் கம்பீர் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் கூறுவது உண்மை அல்ல
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஏழு வருடங்களாக பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். என்னிடம் யாராவது இது குறித்து கேட்கும் போதெல்லாம் கம்பீர் சொன்னது போலவே பேசி இருக்கிறேன். ஆனால் இதனை சற்று ஆழமாக பார்த்தால் நீங்கள் பேசியதை விட இதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதை நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது ஊடகங்களுக்காக பேசப்படுகிற விஷயங்கள் ஆகும்.
இதையும் படிங்க:கோப்பை கனவு தகர்ந்தது.. சூப்பர் கிங்ஸ் வெற்றியை பறித்த மார்க்ரம்.. 32 ரன்னில் சன்ரைசர்ஸ் வெற்றி.. எஸ்ஏ டி20
நீங்க அதை தான் சொல்லணும், ஆனால் உண்மையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறீர்கள். இல்லை என்றால் அடுத்த பாகிஸ்தான் போட்டி வரை உங்களுக்கு அந்த தோல்வி நான் ஞாபகப்படுத்தப்பட்டே இருக்கும். நீங்கள் 10 போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் மக்கள் அதைப் பற்றி தான் பேசுவார்கள். அது டாக்ஸி ஓட்டுபவராக இருக்கலாம், அல்லது தெருவில் இருப்பவராக கூட இருக்கலாம் இந்திய அணிக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி வரும். பாகிஸ்தான் அணிக்கும் இதே நிலைமை இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






