உலககோப்பையில் ஜடேஜா இல்லாத குறையை இவர்தான் தீர்த்து வைப்பர்; அது அக்சர் பட்டேல் இல்லை – டேனியல் வெட்டோரி கருத்து!

0
4112

ஜடேஜா இல்லாத குறையை இந்திய அணியில் இவர்தான் தீர்த்து வைக்கப்போகிறார் என்று கருத்து தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டானியல் வெட்டோரி.

செப்டம்பர் 12ஆம் தேதி டி20 உலக கோப்பைக்கு செல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பை தொடரின் நடுவில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, ஜடேஜா ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். அவரது காயம் தீவிரமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். அதன் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கு செல்லும் அணியில் ஜடேஜா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக அதே அளவில் இருக்கும் அக்சர் பட்டேல் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். மேலும் அனுபவமிக்க அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சகல் இருவரும் சுழல் பந்துவீச்சில் இருக்கின்றனர். ரவி பிஸ்னாய் வெளியில் ரிசர்வ் வீரராக அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் விக்கெட்டுகள் எடுக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவர் இல்லாதது பெருத்த வெற்றிடத்தையும் பின்னடைவையும் இந்திய அணிக்கு கொடுக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கும் அவர் இல்லாத குறையை தீர்ப்பதற்கும் மிகச் சரியான வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கருத்து தெரிவித்திருக்கிறார்.

“அஸ்வின் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்று அனைவருக்கும் தெரியும். டெஸ்ட் போட்டிகளில் இவரது தாக்கம் இன்றியமையாததாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் தன்னை நிரூபித்து நீண்ட இடைவேளைக்கு பிறகு டி20 போட்டிகளில் இடம் பெற்றிருக்கிறார். எந்த ஒரு தருணத்திலும் அஸ்வினை ஒதுக்கி விட முடியாது. தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்.”

“குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்வதில் அஸ்வின் கைதேர்ந்தவர். இதில் பலம் படைத்தவர், இதில் பலவீனமானவர் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத வெகு சில வீரர்களில் அஸ்வின் ஒருவர். தற்போது இருக்கும் இந்திய அணிக்குள் ஆஸ்திரேலியா மைதானத்தில் அதிக அனுபவம் பெற்ற ஒருவராக அஸ்வின் இருக்கிறார். ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தாலும் அதை சுழல் பந்துவீச்சில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்த முடியும், விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்பதையும் நன்கு அறிந்திருப்பார்.”

- Advertisement -

“இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் செயல்பட்ட விதத்தை கண்டு, இளம் சுழல் பந்துவீச்சாளர்கள் நாமும் அந்த அளவிற்கு உயர வேண்டும் என எண்ணக்கூடிய அளவு உயர்ந்தவர்கள். ஜடேஜா இல்லாத இடத்தை நிச்சயம் அஸ்வின் தனது அனுபவத்தை கொண்டு நிரப்புவார். சுழல் பந்துவீச்சில் ஜடஜாவின் குறையை அஸ்வினால் மட்டுமே நீக்க முடியும். விளையாடும் 11 வீரர்களின் இடத்தில் அஸ்வின் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி கூடுதல் பலம் மிக்கதாக காணப்படும் என்று நான் கருதுகிறேன்.”

“இந்திய சுழல் பந்துவீச்சின் எதிர்காலம் பாதுகாப்பான கையில் தான் இருக்கிறது. ராகுல் சஹர் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றனர். வரும் காலங்களில் கூர்ந்து கவனிக்க கூடிய அளவிற்கு இளம் வயதிலேயே நன்றாக செயல்பட்டு வருகின்றனர்.” என்றார்.