தற்போது நடைபெற்ற முடிந்த 19 ஆவது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
என்ற சூழ்நிலையில் இந்திய இளம் வீரர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதேவேளை பெங்களூர் அணிக்குப் பிறகு ராஜஸ்தான் அணி முக்கிய கவனம் பெறுகிற அணிகளில் ஒன்றாக உள்ளது. அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற விட்டாலும் அதன் தொடக்க ஆட்டக்காரரான 15 வயது சிறுவன் தனது அபார ஆட்டத்தால் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்று இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியில் வாய்ப்பு பெற்ற வைபவ் சூர்யவன்சி, இந்த வருடம் முதல் போட்டியில் இருந்தே தனது திறமையை வெளிப்படுத்தி இந்த தொடரின் இறுதியில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், இந்த வருட ஏலத்தில் வைபவ் இடம் பெற்று இருந்தால் யாரும் செல்ல முடியாத அதிக விலைக்கு அவர் சென்றிருப்பார் என்று சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் சந்தேகத்திற்கு இடமின்றி இவர் தான் அனைவரின் பேச்சாகவும் இருக்கிறார். ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரில் வெளியேறியதால் அந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் அவரது அபார ஆட்டத்தால் தலைநிமிர்ந்து அவர் நிற்கலாம். இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற்று வந்து அதில் அவர் இடம் பெற்று இருந்தால் இவரை விட அதிக விலைக்கு வேறு யாரையும் எந்த அணியும் வாங்கி இருக்கும் என்று நான் கருதவில்லை.
ஒவ்வொரு தலைமுறையிலும் விவ் ரிச்சர்ட்ஸ், ஷேன் வார்ன், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி அல்லது ஜாக் காலிஸ் போன்ற உலகம் முழுவதும் சிறுவர் சிறுமியர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான வீரர் இருப்பார். அதேபோல இந்த வீரனும் உலகம் முழுவதிலும் அடுத்த தலைமுறை சிறுவர் சிறுமியர் மீது உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் இருப்பார்” என்று அவர் பேசியிருக்கிறார்.






