தோனி உடன் ஸ்ரேயாசை ஒப்பிட வேணாம்னு நினைச்சாலும்.. இந்த விஷயத்தில் ஒரே மாதிரி இருக்காங்க – ஆஸி டாம் மூடி பேட்டி

0
31

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் மீதம் உள்ள போட்டிகள் வருகிற சனிக்கிழமை முதல் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிறப்பான நிலையில் பஞ்சாப் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான பயிற்சியாளர் மற்றும் சிறப்பான கேப்டன் என அனைத்தையும் மாற்றியமைத்து அதிரடியான வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 7 போட்டிகளில் வெற்றி மற்றும் 3 போட்டிகள் தோல்வி மற்றும் ஒரு ட்ரா என புள்ளிகள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமைத்துவம் பஞ்சாப் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

- Advertisement -

மேலும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் ஆக்சன் இடையே சிறந்த வீரர்களை எடுத்து வலுவான அணியை கட்டமைத்து இருக்கிறார். அதிலும் திறமையான இந்திய இளம் வீரர்களை ஏலத்திலேயே கண்டறிந்து அவர்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரவும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மோடி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

தோனியுடன் ஒப்பிடவில்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரிக்கி பாண்டிங் தலைமைத்துவம் எளிதாக இருக்கிறது. மேலும் ஒரு நபராக பஞ்சாப் அணியில் அவரது இருப்பு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. மேலும் விஷயங்களை அவர் வழியில் சிறப்பாக செயல்படுத்தி அணியினை நல்ல நிலைமையில் வைத்திருக்கிறார். மேலும் பஞ்சாப் அணியை வரலாற்று ரீதியாக பார்க்கும் போது இதற்கு முன்பு நடைபெற்ற கவனச் சிதறல்களின் பாதையை ஓரளவு தெளிவுபடுத்தி இருக்கிறது என்று கூறலாம்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. ப்ளே ஆப்பில் ஆட முடியாத.. 10 நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் – முழுமையான லிஸ்ட்

மேலும் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்தது ரிக்கி பாண்டிங்கை நன்கு அறிந்த ஒருவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் இதுவரை நன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். இது ஒரு புத்திசாலித்தனமான ஆட்டமாக இருக்கும் என்று அப்போதே நான் நினைத்தேன். டி20 கிரிக்கெட்டில் தலைமைத்துவம் என்பது கேப்டனின் இருப்பு மட்டுமே கிடையாது. இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் அணியை நிதானமாக முன்னோக்கி எடுத்துச் செல்லும் முறையும் ஆகும். ஸ்ரேயாஸ் தற்போது ஈர்க்கக் கூடிய ஒரு கேப்டனாக இருக்கிறார். அவர் ஆட்டத்தின் போது எவ்வளவு அமைதியாக இருக்கிறார் மற்றும் அவரைச் சுற்றியுள்ள நபர்களுக்கு எப்படி அதிகாரம் அளிக்கிறார் என்பது குறித்து நன்றாக தெரிகிறது. நான் அவரை எம்எஸ் தோனி உடன் ஒப்பிடவில்லை எம்.எஸ். தோனி என்பது அமைதியின் வழியில் ஒரு தங்க முத்திரை. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் இதே போன்று ஒரு அமைதியான வழியில் கையாண்டு வருவதாக தெரிகிறது” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -