அடிச்சு சொல்றேன்.. விராட் கோலி இதை வேணும்னே செய்றாரு.. அதுக்கு காரணம் இதுதான் – ஆரோன் பின்ச் கருத்து

0
2164

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் சிட்னியில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் ஒரு போட்டி ட்ராவிலும் முடிவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் சமன் செய்து இந்தியா திரும்ப முடியும்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில் அதற்குப் பிறகு நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் நல்ல நிலையை அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னால் வீரர் ஆரோன் பின்ச் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆரோன் பின்ச் கருத்து

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலியை பொருத்தவரை எப்போதுமே அவர் அழுத்தத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராக இருந்திருக்கிறார். இந்தக் கட்டத்தில் அவராக முன்வந்து அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்கிறார். அவர் விரோதமாக இருக்க முயற்சி செய்கிறார், அவராக முன்வந்து சண்டையை எதிர்கொள்ள முயற்சிப்பது போல் தெரிகிறது. அந்த சமயத்தில் தான் அவரது முழு திறமைகளும் வெளிப்படும். எனவே விராட் கோலி அதற்காகத்தான் அதில் ஈடுபடுகிறார் என்பது போல தெரிகிறது.

இதையும் படிங்க:எனக்கு நல்லா தெரியும்.. இந்திய அணி ரோகித்தை நீக்காது.. அதுக்கு காரணம் இது மட்டும்தான் – மைக்கேல் கிளார்க் பேட்டி

விராட் கோலியை அப்படி உணர வைக்க மற்றவர்களை வேண்டுமென்றே செய்வது போல உணர்கிறேன். இந்தத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை பார்க்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியதை பார்த்தேன். அந்தப் போட்டியில் அவர் அவுட் ஆகப்போவதில்லை என்பது போல தோற்றமளித்தார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி நன்றாகப் பந்து வீசியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -