இந்திய கிரிக்கெட்

அஸ்வினுக்காக பயந்து.. ஹெட்டை இப்படி பண்ணிடாதீங்க.. பும்ரா சிராஜ் அடிபணிய மாட்டாங்க – ஆஸி இயான் சேப்பல் கருத்து

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட்டை வைத்து முக்கிய பரிசோதனை ஒன்றை செய்யக்கூடாது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -

இரண்டு அணிகளுக்கும் இடையே வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடைபெறுகிறது. தற்போது ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்திற்கு தங்களின் துவக்க வீரர் யார் என்பது பெரிய குழப்பங்களை உண்டாக்கி வருகிறது.

பிடிவாதம் காட்டும் ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவருடைய துவக்க இடத்திற்கு புதிய வீரரை டெஸ்ட் அணியில் கொண்டு வராமல் ஸ்டீவ் ஸ்மித்தை துவக்க வீரராக விளையாட வைத்தார்கள். இதன் மூலம் கேமரூன் கிரீன் மற்றும் மிட்சல் மார்ஸ் இரண்டு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களையும் பிளேயிங் லெவனில் வைக்க விரும்பினார்கள்.

அதே சமயத்தில் நான்காவது இடத்தில் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்கும் ஸ்மித் துவக்க வீரராக ஜொலிக்க முடியவில்லை. இந்த நிலையில் மூன்று வடிவ கிரிக்கெட் கிரிக்கெட்டுக்கும் சேர்த்து டிராவிஸ் ஹெட்டை துவக்க வீரராக மாற்றி விடலாம் என யோசிப்பதாகவும் தெரிகிறது. தற்பொழுது இந்த யோசனை தவறானது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தந்திரமான அஸ்வின் விட மாட்டார்

இதுகுறித்து இயான் சேப்பல் கூறும்பொழுது “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஹெட் ஓப்பனராக வருவது அவருடைய கட்டுக்கடங்காத ஆக்ரோஷமான பேட்டிங்கை அடிப்படையாகக் கொண்டது. இதன் காரணமாக இரண்டு வடிவங்களிலும் துவக்க வீரராக வருவது சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட் என்பது முற்றிலும் மாறுபட்ட வடிவமாகும்”

“பும்ராவுக்கு எதிராக புதிய பந்தில் அதிரடியாக விளையாடி அவரை அமைதி படுத்த முடியாது. அதேபோல முகமது சிராஜும் சிறப்பாகவே வருவார். இவர்கள் இருவரும் அதிரடியான பேட்டிங் முன்னாள் அடிபணியக்கூடியவர்கள் கிடையாது”

இதையும் படிங்க: 100 சதவீதம் உறுதியா சொல்றேன்.. ரோகித் ஓய்வு பெறுவது அந்த தொடருக்கு பின்தான் – அவரின் முன்னாள் கோச் பேட்டி

“மேலும் தந்திரமான அஸ்வின் அதிரடியான பேட்டிங் மூலமாக பீதியடைய வாய்ப்பில்லை. அஸ்வின் பந்து வீச வருவதற்கு முன்பாகவே ஹெட் துவக்க வீரராக களம் இறங்கி ரன்கள் எடுத்து விடலாம் என்று கூறுவார்கள். ஆனால் அஸ்வின் கேப்டன் புதிய பந்தில் பயன்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இந்திய கேப்டன் அவரை புதிய பந்திலும் பயன்படுத்துவார். ஹெட்டை துவக்க வீரராக கொண்டு வருவது சரியானதாக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: BGT 2024-25