ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பும்ரா இல்லாவிட்டால் தொடர் ஒருதலைப் பட்சமாக முடிந்திருக்கும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் நான் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என முன்னிலையில் இருக்கிறது.
ரோகித் சர்மா – பும்ரா ஒப்பீடு
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்த தொடரில் விளையாடி மொத்தம் 31 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் இந்த தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளராக விளையாடி இருக்கும் பும்ரா மொத்தம் 30 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இந்திய அணியின் முக்கியமான துருப்புச் சீட்டாக இந்தத் தொடரில் இருந்து வருகிறார்.
தற்போது இந்திய அணியில் இருந்து எல்லா நேரத்திலும் ஆஸ்திரேலியா அணிக்கு பிரச்சனை கொடுக்கக்கூடிய ஒரே வீரராக இந்த தொடரில் பும்ரா மட்டுமே இருக்கிறார். பேட்டிங்கில் குறிப்பிட்ட பங்களிப்பை கொடுத்திருக்கும் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் கூட ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாகவும் தொந்தரவாகவும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் ஒருதலைப் பட்சமாக இருந்திருக்கும்
இது குறித்து கூறியிருக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் கூறும்பொழுது “பும்ரா இந்திய அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். அவர் இல்லாவிட்டால் இந்த தொடர் ஒரு தலைப்பட்சமாக முடிந்திருக்கலாம். அவர் செய்வது எல்லாம் மிக சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் அற்புதமான ஒரு பந்துவீச்சாளர். அவர் சில அடிகள் மட்டுமே ஓடி அவ்வளவு சக்தியை கொண்டு வந்து எப்படி வேகமாக பந்து வீசுகிறார்? என்பது ஆச்சரியமாக இருக்கிறது”
இதையும் படிங்க : விராட் கோலியை பார்த்து இந்திய அணி பயப்படுது.. ரோகித் செஞ்ச அத செய்ய வைங்க – பாக் பசித் அலி பேட்டி
“எனக்கு பந்துவீச்சில் ஹைபிரக்ஸ்டென்ஷன் கிடைத்தது. மேலும் பும்ராவும் இதை நல்ல முறையில் சமாளித்து வருகிறார். அத்துடன் பந்தை உள்ளே வெளியே என நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மேலும் அணி நிர்வாகத்தினர் அவரை மிகவும் நல்ல முறையில் நிர்வகித்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் உம்ராவின் பெரிய ரசிகன்” என்று கூறியிருக்கிறார்.






