இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது மிகத் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான பிராட் ஹாக் விராட் கோலியின் ஆட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் மோசமான தோல்வி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் போது இந்திய அணி தொடரை வெல்லும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்திய முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தினால் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரையும் இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் மோசமான ஆட்டமே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வெற்றி பெற வேண்டிய இரண்டாவது ஆட்டத்தில் விராட் கோலி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் வெளியேறிய கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களில் வெளியேறினார். விராட் கோலி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த மறுக்கிறார் என்று இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்து ஆட்டம் இழக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
உணர்ச்சியை விராட் கோலி கட்டுப்படுத்தவில்லை
இது குறித்து அவர் கூறும் போது “நியூசிலாந்து அணியை மிக எளிதாக எடுத்துக்கொண்ட இந்திய அணியினர் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கின்றனர். அதிலும் குறிப்பாக திடீரென்று இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலியின் மனநிலை மாறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மிகவும் ஆக்ரோஷமாக அப்போது இருந்தார். அவர் களத்தில் உலா வந்த விதம் வந்த எதிர்கொண்ட விதம், பந்துவீச்சை அடிக்க முயன்ற விதம் என தாக்குதல் ஆட்டத்தை ஆட முயற்சித்தார்.
இதையும் படிங்க:28 வருடங்களுக்குப் பிறகு.. ஜிம்பாப்வே எடுத்த வரலாற்று முடிவு.. ஆப்கான் அணி மகிழ்ச்சி.. வெளியான புதிய அட்டவணை
அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதவாறு தோற்றமளித்தார். இதில் மற்றொரு வீரரான ரோஹித் சர்மாவின் டெக்னிக்கை பார்த்தால் அவர் சவுத்தியின் பந்துவீச்சில் இருக்கமான மனநிலையில் விளையாடியது போல் தோன்றியது. எனவே விராட் கோலியும் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்று கூறியிருக்கிறார். எனவே இந்த இரண்டு அணிகளுக்கிடையே என கடைசி டெஸ்ட் போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.






