நெதர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. பங்களாதேஷை பந்தாடி அசத்தல் வெற்றி.. புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு மீண்டும் சோகம்!

0
756
Netherlands

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து பேட்டிங் செய்வது என அறிவித்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிந்தது.

- Advertisement -

நெதர்லாந்து அணிக்கு வெஸ்லி பரேசி 41, ஸ்காட் எட்வர்ட்ஸ் 68, சைப்ரண்ட் 35, லோகன் வான் பீக் 23 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் மெகதி ஹசன் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் என எல்லோரும் வரிசையாக நடையக் கட்டினார்கள்.

பங்களாதேஷ் அணிக்கு அதிகபட்சமாக மெகதி ஹசன் மிராஸ் 35, மகமதுல்லா 20, முஸ்தஃபிஷர் ரஹ்மான் 20 ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் வருவதும் போவதும் ஆக மட்டுமே இருந்தார்கள் பெரிய பங்களிப்பை தரவில்லை.

- Advertisement -

இறுதியாக 42.2 ஓவரில் பங்களாதேஷ் அணி 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை எடுத்து நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இருந்தது. ஒரு உலகக் கோப்பையில் இரண்டு வெற்றிகளை பெறுவது நெதர்லாந்து அணிக்கு இதுவே முதல் முறை!

நெதர்லாந்து பந்துவீச்சில் 7.2 ஓவர் பந்துவீசி 23 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றிய பால் வான் மீக்கரன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது!