“என்னை பொறுத்தவரை இந்த இந்திய வீரர் துரதிஷ்டசாலி.. என்ன செஞ்சும்..!” – அபினவ் முகுந்த் பேச்சு!

0
642
ICT

இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டி20 போட்டியை வென்றதோடு தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 174 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு மற்ற ஆட்டங்களை விட கொஞ்சம் குறைவாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் குவித்து வலிமையான முன்னிலை பெற்று இருந்தது.

இந்த நேரத்தில் உள்ளே வந்த இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ரவி பிஸ்னோய் மற்றும் அக்சர் படேல் இருவரும் அற்புதமாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியை மடக்கி இந்திய அணியை வெல்ல வைத்தார்கள். அக்சர் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதில் ஒரு கசப்பான செய்தியாக அவர் தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து பேசி உள்ள அபினவ் முகுந்த் கூறும் பொழுது “ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் சிறிது அழுத்தத்திற்கு உள்ளான தொடரில், பேட்டர்கள் மீது அழுத்தத்தை கொடுத்த ஒரே பந்துவீச்சாளராக நான் அக்சர் படேலை பார்க்கிறேன். அவர் மிகவும் ரசித்து விளையாடினார்.

- Advertisement -

என்னை பொருத்தவரை இவர் துரதிஷ்டவசமானவர். எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறதோ அங்கெல்லாம் தன்னால் முடிந்த வரை மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அப்படி இருந்தும் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு பந்தை கொஞ்சம் மெதுவாக வீசுகிறார். மேலும் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கான வட்டத்திற்குள் பந்தை அவர் வீசுவதில்லை. இந்த போட்டியில் 16 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்று அவர் வந்தது, அவருடைய மனநிலை எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது!” என்று காட்டுகிறது என்று கூறி இருக்கிறார்!