இந்த ஒரு இந்திய வீரருக்கு எதிராக பந்து வீசுவது மட்டும் மிக கடினம் – உண்மையை ஒப்புக் கொண்ட ரஷித் கான்

0
1500

நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது. அந்த அணியில் ஸ்பின் பந்து வீச்சாளர் மத்தியில் ரஷீத் கான் மிக அற்புதமான தொடர் முழுக்க பந்து வீசினார். இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இறுதிப்போட்டி மட்டுமின்றி தொடர் முழுக்க மிக அற்புதமாக பந்துவீசிய மொத்தமாக 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவருடைய பவுலிங் எக்கானமி 6.60 மட்டுமே. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஒரு சில போட்டிகளில் இறுதி நேரத்தில் அதிரடியாக அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் தற்பொழுது தனது சக அணி வீரர் குறித்து ஒரு சில விஷயங்களை பெருமையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம்

ஒரே அணியில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சி என்று சுப்மன் கில் குறித்து ரஷித் கான் பேசியுள்ளார்.”அவரைப் போல ஒருவர் நம்முடன் இருக்கையில், ஆட்டத்தில் நமக்கு நிறைய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பார். தொடர் முழுக்க அவர் ஆடிய விதம் நம்பமுடியாதது, அவ்வளவு அற்புதமாக அவர்களை ஆடியிருக்கிறார்.

அவருக்கு எதிராக பந்து வீசுவது மிக கடினம் என்று நான் நினைக்கின்றேன். எனக்கு எதிரணியில் அவர் விளையாடாமல் நல்லவேளை அவர் எனது அணியில் என்னுடன் ஒன்றாக இணைந்து விளையாடிக் கொண்டிருக்கிறார், என்று புன்னகைத்தபடி ரஷித் கான் சுப்மன் கில் குறித்து பெருமையாக பேசி உள்ளார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக கில் 483 ரன்கள் குவித்துள்ளார் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 34.50 ஆக இருந்துள்ளது. குறிப்பாக இறுதிப்போட்டியில் 43 பந்துகளில் 45* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய ஆட்டம் இறுதி போட்டியை வெல்ல ஒரு முக்கிய காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.