ஐந்து முறை கோப்பைகளை வென்று இருக்கிறோம்; ஆனால்… ரோகித் சர்மா பேட்டி!

0
965
Rohitsharma

இன்று 16வது ஐபிஎல் சீசனின் மிக முக்கியமான போட்டி நடைபெற்றது. அந்த போட்டி சென்னை மும்பை அணிகள் மும்பையில் மோதிக்கொண்ட போட்டி. இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டி என்றாலே ஐபிஎல் தொடரில் போட்டி முன்னிலையில் இருக்கும். இன்றைய போட்டியும் அதற்கு விதிவிலக்காக இல்லை!

மிகச் சிறப்பாக ஆரம்பித்த மும்பை அணி பவர் பிளேவுக்கு அடுத்து சரியாக விளையாடாத காரணத்தால் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இசான் கிஷான் 32 ரன், டிம் டேவிட் 31ரன் எடுத்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய சென்னை அணிக்கு ரன் இல்லாமல் கான்வே ஏமாற்றினாலும் ரகானே 27 பந்தில் 61 ரன்கள் குவித்து சென்னையின் வெற்றியை மிக எளிதாக ஆக்கிவிட்டார். 18.1 ஓவரில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின் பேசிய மும்பை அணியின் கேப்டன் ” கிடைத்த தொடக்கத்தை நாங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை. நடுவில் நாங்கள் தவறி விட்டோம். போட்டியில் 30 40 ரன்கள் பின்தங்கி இருந்தோம். அவர்களது ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தனர். நாங்கள் அழுத்தத்தில் சரியாக அவர்களுக்கு பதிலடி தரவில்லை. நாம் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்க வேண்டும், தாக்கி தைரியமாக விளையாட தயாராக இருக்க வேண்டும். எங்கள் அணியில் இரண்டொரு ஐபிஎல் க்கு புதிதான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் அவர்களை பேக்கப் செய்து அவர்களின் திறமை மீது நம்பிக்கை காட்ட வேண்டும்!” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா
” என்னில் தொடங்கி சீனியர் வீரர்கள் முன்னின்று விளையாட வேண்டும். ஐபிஎல் தன்மையைப் பற்றி நான் அறிவேன். நாங்கள் இன்னும் கொஞ்சம் வேகத்தை பெற வேண்டும். இல்லையென்றால் கொஞ்சம் கடினமாக இருக்கும். இரண்டு ஆட்டங்கள் தான் தோற்று இருக்கிறோம் எல்லா ஆட்டத்தையும் தோற்கவில்லை. பேட்டிங்கில் சீனியர் வீரர்கள் முன்னின்று விளையாட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள் தோற்றால் மீண்டும் தோல்வி வரும் இதுதான் ஐபிஎல் தன்மை!” என்று கூறினார்.

- Advertisement -

இறுதியாக பேசிய ரோஹித் சர்மா
” டிரஸிங் ரூமில் பேசும் விஷயங்களை தற்போது எங்களால் களத்தில் செயல்படுத்த முடியவில்லை. அந்த விஷயங்களை நாங்கள் சரியாக செய்ய வேண்டும். கடந்த சீசன் எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் எப்போதும் புதிதாக தொடங்க வேண்டும். நாங்கள் ஐந்து கோப்பைகளை வென்றெடுக்கிறோம். நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஒவ்வொரு எதிர்ப்பும் தரமானது. அதை முறியடிக்க நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். களத்தில் விஷயங்களை செய்வதை கற்றுக் கொள்ள வேண்டும் தைரியமாக இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்.