12 ஆண்டுகளில் முதல்முறை.. கேன் வில்லியம்சனுக்கு நடந்த பரிதாபம்.. செம ஃபார்ம் வீணா போச்சு

0
431
Kane

ஆஸ்திரேலியா அணி தற்போது நியூசிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு கேமரூன் கிரீன் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி நேற்று சதம் அடித்தார்.

- Advertisement -

முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 9 விக்கெட் இழந்து இருந்த ஆஸ்திரேலியா அணி இன்று தொடர்ந்து விளையாடியது. கேமரூன் கிரீன் மற்றும் ஹேசில்வுட் இருவரும் தொடர்ந்து விளையாடி பத்தாவது விக்கட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீன் 275 பந்துகளில் 174 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். ஹேசில்வுட் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து விளையாட ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலில் அதிர்ச்சிகள் காத்திருந்தது. நியூசிலாந்து வணிக என்று தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ஐந்து ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் கேன் வில்லியம்சன் களம் வந்தார். இவர் சந்தித்த இரண்டாவது பந்தில், பந்தை நேராகத் தட்டி விட்டு ரன் எடுப்பதற்கு ஓடி வந்தார்.

இந்த நேரத்தில் எதிர் முனையில் இருந்து வந்த பேட்ஸ்மேன் வில் யங் மற்றும் பந்துவீச்சாளர் இருவரும் சேர்ந்து குழப்பத்தில் கேன் வில்லியம்சன் மீது மோத, இதற்குள் பந்தை எடுத்த லபுசேன் சரியாக ஸ்டெம்பை அடிக்க, கேன் வில்லியம்சன் பரிதாபமாக ஆட்டம் இழந்து விட்டார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024.. சிஎஸ்கே வீரர்களின் சம்பள பட்டியல்.. தோனியை தாண்டிய 3 வீரர்கள்

கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளாக ரன் அவுட் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவர் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி இருக்கிறார். தற்பொழுது நியூசிலாந்து 140 ரன்னுக்கு ஏழு விக்கெட் என்று விளையாடி வருகிறது.