இப்படியும் நடக்குமா? ஒரு சிக்ஸர் கூட அடிக்காத ஒரே டி20 போட்டி – வினோதமான சாதனை படைத்த இந்தியா-நியூசிலாந்து 2வது டி20 போட்டி!

0
7249

இந்தியா-நியூசிலாந்து 2வது டி20 போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாததால் வினோதமான சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கும் எளிதாக சேஸ் அமையவில்லை. நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தனர். கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில், 19.5 ஓவர்களில் 101 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 239 பந்துகள் பிடித்திருக்கின்றன. இது வினோதமான சாதனையாக அமைந்திருக்கிறது.

சாதனை விபரம்

- Advertisement -

ஐசிசியின் முழு நேர உறுப்பினராக இருக்கும் அணிகள் மத்தியில் அதிக பந்துகள் பிடித்து(239 பந்துகள்) சிக்சர் அடிக்காத டி20 போட்டியாக இது அமைந்திருக்கிறது. இதற்கு முன்னர் 2021ல் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் 238 பந்துகள் பிடித்து சிக்சர் அடிக்காதது அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து, இந்த போட்டி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

ஒரு டி20 போட்டியில் அதிக பந்துகள் சந்தித்து சிக்சர் அடிக்காத போட்டிகள்:

1. 239 பந்துகள் – இந்தியா vs நியூசிலாந்து, லக்னோ 2023

2. 238 பந்துகள் – பங்களாதேஷ் vs நியூசிலாந்து, மிர்பூர் 2021

3. 223 பந்துகள் – இங்கிலாந்து vs பாகிஸ்தான், கார்டிப் 2010

4. 207 பந்துகள் – இலங்கை vs இந்தியா, கொழும்பு 2021